அரச தொழில் முயற்சியாண்மையாக சப்புகஸ்கந்தவை நிறுவ அமைச்சரவை அனுமதி
சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திலிருந்து வேறானதொரு அரச தொழில் முயற்சியாண்மையாக நிறுவ அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த யோசனையை மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவால் சமர்பிக்கப்பட்டுள்ளது.
அரச தொழில் முயற்சியாண்மை
இலங்கையிலுள்ள ஒரேயொரு எரிபொருள் சுத்திகரிப்பு நிலையமான சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை மேம்படுத்தி, மேலும் 25 வருடங்கள் பயன்படுத்துவதற்காக குறிப்பிடத்தக்க முதலீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.
அதற்கு தேவையான முதலீட்டை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தனியார் துறையினர் மூலம் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் வேறானதொரு அரச தொழில் முயற்சியாண்மையாக, சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
