சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள அசௌகரியம் - நெருக்கடியில் மக்கள்
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை சூழவுள்ள பகுதியில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகாரசபையிடம் இருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளதாக பியகம பிரதேச சபையின் தலைவர் ஆனந்த கணேபொல தெரிவித்துள்ளார்.
கடும் துர்நாற்றம்
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் கடந்த சில நாட்களாக கடும் துர்நாற்றம் வீசுவதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதன் காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர்.
விசேட அறிக்கை
இது தொடர்பில் பியகம உள்ளூராட்சி சபையின் தலைவர் ஆனந்த கணேபொலவிடம் வினவிய போது இது தொடர்பில் சுகாதார அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விடயம் தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு தெரியப்படுத்தியதையடுத்து இது தொடர்பான அறிக்கையை கோருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.