ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் நிலைப்பாடு தொடர்பாக வினவிய சந்தோஷ் ஜா
வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின் நிலைப்பாடு என்னவென்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா (Santhosh Jha) வினவியுள்ளார்.
கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தில் நேற்று (16.07.2024) தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடும் போதே அவர் இந்தக் கேள்வியை கேட்டுள்ளார்.
அத்துடன் தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பிலும், அது குறித்து தமிழ் மக்களின் நிலைப்பாடு பற்றியும் இந்தியத் தூதுவர் வினவியுள்ளார்.
உறுதிமொழிகள்
இதன்போது, தாம் பொதுவான கருத்துக்களைத் தெரிவித்தோம் என்று சந்திப்பில் கலந்துகொண்ட தமிழரசுக் கட்சியின் எம்.பிக்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தென்னிலங்கை பிரதான வேட்பாளர்களின் தமிழ் மக்கள் தொடர்பான உறுதிமொழிகள் குறித்தும் தம்மிடம் இந்தியத் தூதுவர் கேட்டறிந்தார் என்றும் மேற்படி சந்திப்பில் கலந்துகொண்ட தமிழரசுக் கட்சியின் எம்.பிக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam
