இலங்கையின் பாதுகாப்பு அமைச்சுக்கு சென்ற இந்திய உயரஸ்தானிகர்
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா, கோட்டை, ஸ்ரீஜெயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சுக்கு சென்று பாதுகாப்பு செயலாளர் சம்பத் துயகொண்டாவை சந்தித்தார்.
இந்த சந்திப்பு நேற்று (08.02.2025) இடம்பெற்றது.
சந்தோஸ் ஜாவுடன் இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் ஆனந்த் முகுந்தன் மற்றும் உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்னபட்ல் மன்தீப் சிங் நேகி ஆகியோர் சந்திப்பில் இணைந்திருந்தனர்.
பாதுகாப்பு நடவடிக்கைகள்
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பிராந்திய பாதுகாப்பு மற்றும் கடல்சார் ஒத்துழைப்பு குறித்து இரண்டு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
பாதுகாப்பு விடயங்களில், குறிப்பாக பயங்கரவாத எதிர்ப்பு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மீட்பு ஆகியவற்றில் இந்தியா இலங்கைக்கு அளிக்கும் அசைக்க முடியாத ஆதரவை இந்திய உயர்ஸ்தானிகர் இதன்போது வலியுறுத்தினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![உணவு, தண்ணீரை சேமிக்க அறிவுறுத்தல்... ரஷ்யாவுக்கு எதிராக மூன்று ஐரோப்பிய நாடுகள் அதிரடி](https://cdn.ibcstack.com/article/8f7a16c3-a86a-4ebc-8b3b-f5a8cc3f140a/25-67a7077018bb5-sm.webp)
உணவு, தண்ணீரை சேமிக்க அறிவுறுத்தல்... ரஷ்யாவுக்கு எதிராக மூன்று ஐரோப்பிய நாடுகள் அதிரடி News Lankasri
![தான் படிக்க வைத்த பெண்ணே தனக்கு அதிகாரியாக எஸ்ஐ சீருடையில் வந்து நின்றதால் இன்ப அதிர்ச்சியான காவலர்](https://cdn.ibcstack.com/article/e263aa7f-96be-4fdd-b622-39e30e84291e/25-67a6deb6b5243-sm.webp)
தான் படிக்க வைத்த பெண்ணே தனக்கு அதிகாரியாக எஸ்ஐ சீருடையில் வந்து நின்றதால் இன்ப அதிர்ச்சியான காவலர் News Lankasri
![பிக்பாஸ் புகழ் ஷிவானியா இது, முகத்தை என்ன செய்தார், ஆளே மாறிவிட்டாரே?.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ](https://cdn.ibcstack.com/article/e2e1cc8b-1a0a-4a48-9f21-b58e2287b57c/25-67a5ed0769138-sm.webp)