தமிழகத்தில் ஈழத்தமிழருக்கு நேர்ந்துள்ள கதி! முடிந்தால் காப்பாற்றுங்கள் - சட்டத்தரணி அதிர்ச்சித் தகவல்
தனக்கு இலங்கையில் கிடைக்கும் வரவேற்பு தொடர்பில் மிகவும் பெருமையாக சாந்தன் கூறியிருந்ததாக சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார்.
இதேவேளை அங்கிருக்கு முருகன், ரொபட் பாயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகிய மூவரையும் காப்பாற்ற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இன்று (05.03.2024) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சாந்தன் 32 ஆண்டுகள் மன உறுதியுடன் சிறையில் இருந்தார். ஆனால், ஒரு வருடத்திற்குள் அவர் திருச்சி சிறப்பு முகாமில் மன நோயாளியாக மாற்றப்பட்டார்.
உடல் அளவிலும் செயற்பட முடியாத அளவிற்கு மாறினார். சிறப்பு முகாமின் வடிவமைப்பு என்பது மிகவும் கொடுமையானது. இந்நிலையில், அங்கிருக்கு முருகன், ரொபட் பாயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோரை உடன் மீட்க வேண்டும்.
அதற்கு இலங்கையில் இருக்கக் கூடிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயற்சி எடுக்க வேண்டும். தமிழகத்தில் இருக்கும் அரசியல் கட்சிகளுக்கு நாங்கள் அழுத்தம் கொடுக்கின்றோம். இரு தரப்பினரும் இணைந்து செயற்பட்டு அங்கிருக்கும் மூவரையும் காப்பற்ற வேண்டும்.
அதற்காக நான் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன். “என்னை இலங்கைக்கு அனுப்பிய பின்னர் எனக்கு எப்படி வரவேற்பு கிடைக்கும் என்பதை” நீங்கள் பார்க்க முடியும் என்று சாந்தன் என்னிடம் கூறியிருந்தார்.
அதனைய அவரின் மரணத்தில் மூலம் கண்டுகொண்டேன். அவர் மீது மக்கள் எவ்வளவு பற்று கொண்டிருந்தார்கள் என்பதை அறிந்து கொண்டேன். அதை நினைத்து நான் பெருமைப்படுகின்றேன் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |