சாந்தனின் சடலம் நளினி மற்றும் அவரது சட்டத்தரணியிடம் கையளிப்பு
தமிழ்நாடு ராஜீவ்காந்தி வைத்தியசாலையில் உயிரிழந்த சாந்தனின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் நளினி மற்றும் அவரது சட்டத்தரணி புகழேந்தி ஆகியோரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அவரது பூதவுடல் இன்று இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தன் உள்ளிட்ட 7 பேரும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு விடுதலை செய்யப்பட்டனர்.

சடலத்தினை இலங்கைக்கு கொண்டுவர ஏற்பாடு
கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட சாந்தன் தன்னை இலங்கைக்கு அனுப்புமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கடந்த 24 ஆம் திகதி மத்திய அரசு அதற்கு அனுமதி வழங்கியிருந்தது.

இதற்கமைய, அவர் இலங்கைக்கு நாடு திரும்பவிருந்த நிலையில் திடீரென அவர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை உயிரிழந்திருந்தார்.
இந்நிலையில், அவரது சடலத்தினை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அவரது சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri