சந்நிதியான் ஆச்சிரமத்தில் சிறப்பாக இடம்பெற்ற திருவாசக விழா (Photos)
சந்நிதியான் ஆசிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் வருடாந்த திருவாசக விழா சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த விழாவானது நேற்று (27.12.2023) காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகியுள்ளதுடன், முதல் நிகழ்வாக செல்வச்சந்நிதியான் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.
தொடர்ந்து, நாயன்மார்களின் திருவுருவங்களும், திருவாசக ஏடுகளும் ஆலயத்திலிருந்து தேவார பாராயணத்துடன் ஆச்சிரமத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளன.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி
இந்நிகழ்வில், அறிமுக உரையை ஆசிரியர் இரா.செல்வவடிவேல் நிகழ்த்தியுள்ளதோடு சிறுப்பிட்டி நாகதம்பிரான் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் நடனமும் இடம்பெற்றுள்ளது.

மேலும், சிறப்பு சொற்பொழிவை உளவள துணையாளர் நா.நவராஜ் நிகழத்திய அதேவேளை, திருவாசக பண்ணிசையை இசைநாவரசு எம்.எஸ்.பிரதீபன் வழங்கியுள்ளார்.
தொடர்ந்து, சந்நிதியான் ஆச்சிரமத்தால் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு ரூபா 500,000 ரூபா பெறுமதியான அத்தியவசியமான உணவுப் பொருட்கள் ஆசிரம முதல்வர் கலாநிதி மோகன சுவாமிகளால் வழங்கப்பட்டுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri