நல்லூர் கந்தனை தங்கத்தால் அலங்கரித்தவர் கோவிட்டால் மரணம்
நல்லூர் கந்தனை தங்கத்தினால் அலங்காரம் செய்தவர்களில் ஒருவரான இரத்தினசபாபதி சிவசண்முகநாதன் கோவிட் தொற்றால் உயிரிழந்துள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் இரண்டு வார காலம் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி கடந்த 19ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.அவரின் உடலம் அன்றையதினமே தகனம் செய்யப்பட்டுள்ளது.
சிவசண்முகநாதன் யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர் ஆவார். சமகாலத்தில் தென்னிந்தியாவில் சினிமா தொழில் துறை சார்ந்த சில நிறுவனங்களுக்கு உரிமையாளராக செயற்பட்டுள்ளார்.
நல்லூர் கந்தனின் உற்சவமூர்த்திகளை அலங்காரம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அத்துடன் நல்லூர் கந்தனின் ஆறுமுகசுவாமி பகுதியை பொன்னால் செய்த வேலைப்பாடுகளை இந்தியாவிலும் நல்லூரிலும் முன்னின்று வழிநடத்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri