சிறை அதிகாரிகளின் ஆசியுடன் நடந்த சஞ்சீவனின் கொலை!
கொழும்பு குற்றப்பிரிவு இதுவரை நடத்திய விசாரணைகளில், புதுக்கடை நீதிமன்றத்தில் பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டமையானது, அன்றைய தினம் பாதுகாப்பு வழங்க வந்த சிறை அதிகாரிகள் குழு மற்றும் பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் குழுவின் அறிவுறுத்தலுடன் மேற்கொள்ளப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.
புலனாய்வு விசாரணைகளை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
மேலும் குறித்த செய்தியில்,
கணேமுல்ல சஞ்சீவ நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டபோது அவரது பாதுகாவலராக செயல்பட்ட பிரதான சிறைச்சாலை அதிகாரியை கொழும்பு குற்றப்பிரிவு கைது செய்துள்ளது.
நீதிமன்ற உத்தரவு
இதற்கமைய நீதிமன்ற உத்தரவுகளின் பிரகாரம் அவர் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கணேமுல்ல சஞ்சீவ நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட நாளில் அவருக்கு பாதுகாப்பு அளித்த சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 12 சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளின் கையடக்க தொலைபேசி பதிவுகளின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் வங்கிக் கணக்குகள் மற்றும் சொத்துக்கள் குறித்து பொலிஸார் தற்போது விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட நாளில், அவர் புதுக்கடை நீதிமன்றத்தின் 9 ஆம் எண் மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சிறை அதிகாரிகள்
பின்னர் 2 ஆம் எண் மண்டபத்திற்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டது. ஆனால் சிறை அதிகாரிகள் அவரை மண்டபம் எண் 05 க்கு அழைத்துச் சென்றிருந்தனர்.
சஞ்சீவவைக் கொல்லும் நோக்கத்துடன் பாதாள உலகக் கொலையாளி மண்டபம் எண் 05 இல் இருப்பதை சிறை அதிகாரிகள் முன்பே அறிந்திருந்ததாகவும், சஞ்சீவவை அந்த மண்டபத்திற்கு அழைத்துச் செல்ல அவர்கள் திட்டமிட்டிருந்ததாகவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இருப்பினும், இந்த கொலை சம்பவம் தொடர்பாக சிறைச்சாலை மற்றும் பாதுகாப்புப் படையினர் குழுவின் சில அதிகாரிகள் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மருத்துவப் பணியை விட்டுவிட்டு முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற IAS அதிகாரி News Lankasri

SBI, PNB, BoB ஆகிய வங்கிகளில் 400 நாட்கள் FD .., ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் திரும்ப கிடைக்கும் தொகை? News Lankasri

Serial update: அத்துமீறிய அறிவுக்கரசி.. கழுத்தை நெறித்தப்படி எச்சரித்த அதிகாரி- தர்ஷன் மாட்டுவாரா? Manithan
