இலங்கையில் இப்படியும் மனிதர்கள்...! சமூக வலைத்தளங்களில் புகழப்படும் சங்கக்கார
இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் குமார் சங்ககாரவின் நேர்மையான செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது.
சாரதி அனுமதி பத்திரத்தை புதுப்பிக்க சென்ற சங்கக்கார பிரபுகளுக்குரிய வரப்பிரசாதத்தை மறுத்து, சாதாரண நடைமுறையின் கீழ் பெற்றுள்ளார்.
நேரிமையான செயற்பாடு
இதற்காக மக்களோடு மக்களாக இரண்டு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளார்.
அவரை வரிசையில் நிற்காமல் உள்ளே வரும்படி பல அதிகாரிகள் அழைத்த போதும், சங்கக்கார அதனை மறுத்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் பாராட்டு
சர்வதேச ரீதியாக புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான, நேர்மையான முறையில் மக்களோடு இணைந்து செயற்பட்டமை குறித்து சமூக வலைத்தளங்களில் பாராட்டு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இலங்கையில் அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் உறவினர்களால் அரசாங்கத்தின் வளங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், நாட்டுக்காக பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்த சங்கக்காரவின் நேர்மையான செயற்பாடு பாராட்டத்தக்க விடயம் தான்.
நேற்றைய தினம் கூட முன்னாள் அமைச்சர் ஒருவரின் மகன் மற்றும் மருமகள், போக்குவரத்து விதி முறைகளை மீறிச் செயற்பட்டதுடன், அவர்களை கண்டித்த பொலிஸாரையும் கடும் சொற்களால் திட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொலிஸாரை மோசமாக திட்டிய அரசியல்வாதியின் மகன் மற்றும் மருமகள்

ஒரே ஒரு மாணவன் மற்றும் ஒரே ஒரு ஆசிரியருக்காக செயல்படும் அரசு பள்ளி.., எந்த மாநிலத்தில்? News Lankasri
