வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அழைப்பு விடுத்துள்ள சங்கக்கார
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் வளர்ச்சிக்கு சர்வதேச சுற்றுலாப்பயணிகள் உதவ வேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார சங்கக்கார கோரிக்கை விடுத்துள்ளார்.
தமது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர்,
"மிக மோசமான வெள்ளப்பெருக்கிலிருந்து மீள்வதற்கு சுற்றுலாத்துறை ஒரு முக்கிய உந்து சக்தியாக இலங்கைக்கு உள்ளது. இதனால், சர்வதேச பயணிகள் இலங்கைக்கு வர வேண்டும்.
முழுமையான திறந்துள்ள சுற்றுலா தளம்
அனைவருக்கும் இலங்கை திறந்திருக்கும். இலங்கை பாதுகாப்பானது. உங்களை வரவேற்க நாடு தயாராகவுள்ளது. உங்கள் வருகை இலங்கையின் வளர்ச்சிக்கு உந்துசக்தியாக இருக்கும்." - என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த நவம்பர் 29ஆம் திகதி நாடு தழுவிய அவசரகால நிலையை அரசு அறிவித்துள்ள போதிலும், நாடு இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாக சுற்றுலாத்துமுறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அனைத்து முக்கிய சுற்றுலா மற்றும் கலாசார தளங்களும் முழுமையாக திறந்துள்ளன. சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் முக்கிய வீதிகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் முழுமையாக இயங்குகின்றன என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri