சனத் நிஷாந்தவின் பிள்ளைகளை பராமரிப்பது ராஜபக்ச குடும்பத்தின் பொறுப்பு:தினேஷ் குணவர்தன
ராஜபக்ச குடும்பத்திற்கு சனத் நிஷாந்த செய்யாத ஒன்றும் இல்லை எனவும், மூன்று பிள்ளைகளையும்,அவரின் மனைவியையும் பராமரிக்கும் பொறுப்பு ராஜபக்ச குடும்பத்தின் பொறுப்பாகும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பு – கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெற்றுள்ளன.
இந்த இறுதிக்கிரியை நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்தன இரங்கல் செய்தியொன்றை அனுப்பி இதனை தெரிவித்துள்ளார்.
ராஜபக்ச குடும்பத்திற்கு சனத் நிஷாந்த செய்யாத ஒன்றும் இல்லை எனவும், மூன்று பிள்ளைகளையும் சாமரியையும் பராமரிக்கும் பொறுப்பு ராஜபக்ச குடும்பத்தின் பொறுப்பாகும் எனவும் அந்த இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து அமைச்சர் சனத் நிஷாந்தவின் மறைவின் பின்னர் தனது துயரில் பங்கு கொண்ட அனைவருக்கும் அமைச்சரின் மனைவி நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், மகிந்த ராஜபக்ச உட்பட பல முக்கியஸ்தர்களுக்கும்,தொலைபேசியில் அழைத்து ஆறுதல் கூறிய பசில் ராஜபக்ச, சாகர காரியவசம், அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி உட்பட அனைத்து மகளிர் நிர்வாக சபை உறுப்பினர்களுக்கும் நன்றி கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |













தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

Ethirneechal: அன்பு வலையில் வீழ்ந்த தர்ஷன்... சிறையிலிருந்து வெளிவந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ Manithan

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri
