சனத் நிஷாந்தவை பார்த்து கதறி அழுத இளைஞர்கள்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த இறந்த பொழுது இளைஞர்கள் வந்து பெரிய பலத்தை இழந்தவர்கள் போல் அழுதார்கள் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சனத் நிஷாந்த மீது மக்களுக்கு உள்ள மரியாதை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
சனத் நிஷாந்த தன் பதவியை தேவையில்லாமல் பயன்படுத்தியவர் இல்லை. அந்த காலகட்டத்தில் சில பிரச்சினைகள் வந்தபோது அரசு எப்போதும் பக்கபலமாக இருக்கவில்லை என்பது உங்களுக்கு தெரியும். அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தினாலும் மக்கள் பக்கம் அமர்ந்து பேசிய தலைவர். அதுதான் அவரது அரசியலில் நான் கண்ட முக்கியமான விடயம்.

ஆரம்பம் முதல் இறுதி வரை இறுதிக் கிரியைகளில் தலையீடு செய்தமைக்காக அமைச்சர் மகிந்தானந்த அவர்களுக்கு விசேடமாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
சனத் நிஷாந்த மீது மக்களுக்கு மரியாதையை நாங்கள் பார்த்தோம்.
இன்று நம்மிடையே நயவஞ்சகர்கள் இருக்கிறார்கள். தாய் தந்தையரை மறந்து கிழவன் கிழவி என்று அழைக்கும் மக்கள் வாழும் நாட்டில் அவர்களின் செய்கைகளை அறிந்த புத்தளம் மாவட்ட மக்களை நாம் மதிக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
15 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 47 ரன்! 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சம்பவம் செய்த வீரர் News Lankasri