சனத் நிஷாந்தவிற்காக இரவில் நடத்தப்பட்ட பூஜை : ஒரே இடத்தில் கூடிய மகிந்த குடும்பம்
விபத்தில் சிக்குண்டு உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் ஆத்ம சாந்திக்காக கொழும்பில் விசேட பூஜை வழிபாடொன்று நடத்தப்பட்டுள்ளது.
இந்த விசேட பூஜை வழிபாடு நேற்றையதினம் இரவு அத்தனகம பன்யாலங்கார தேரரினால் நடத்தப்பட்டது.
மகிந்த குடும்பத்தினர்
இந்த பூஜை நிகழ்வுகளின் போது, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்ச மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி ராஜபக்ச உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது சனத் நிஷாந்தவின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பிரசன்னமாகியிருந்தனர்.
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த கடந்த மாதம் 25ஆம் திகதி ஏற்பட்ட வாகன விபத்தில் உயிரிழந்திருந்தார்.
இவர் ராஜபக்ச குடும்பத்தின் தீவிர விசுவாசியாக பார்க்கப்பட்டதுடன், காலி முகத்திடல் போராட்டக்களத்தில் ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது தாக்குதல் நடத்தியன் பின்னர் அதிக சர்ச்சைகளுக்குள் உள்ளான ஒரு நபராக பார்க்கப்பட்டார்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமணத்தின் பயன்படுத்திய மின்சாரத்திற்கான கட்டணத்தை பின்னொரு நாளில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |