இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ள சனத் ஜயசூரிய
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் செய்தமை தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய விசேட நன்றியை தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் ஜயசூரிய இந்த நன்றியை தெரிவித்துள்ளார். இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவதை ஊக்குவிப்பதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு இந்த நன்றியை தெரிவித்துள்ள ஜயசூரிய, எதிர்காலத்தில் ஒன்றாக இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாகவும் அதில் கூறியுள்ளார்.

சனத் ஜயசூரிய இலங்கையின் சுற்றுலாத்துறை விளம்பர தூதுவராக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார். இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதற்கான திட்டங்களிலும் அவர் ஈடுபட்டு வருகிறார்.
இந்திய சுற்றுலா பயணிகளுக்காக இராமாயண பாதை சுற்றுலா திட்டத்தை ஊக்குவிப்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக சனத் ஜயசூரிய கூறியிருந்தார்.
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam