சனத் ஜயசூரியவின் பதவிக் காலம் நீடிப்பு
இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமைப் பயிற்றுவிப்பாளர் சனத் ஜயசூரியவின் பதவிக்காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கட் இன்று(29) அறிவித்துள்ளது.
2024 ஜூலை 07ஆம் திகதியன்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஆடவர் தேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இலங்கையின் முன்னாள் தலைவர் சனத் ஜெயசூர்யா தற்காலிகமாக நியமிக்கப்பட்டார்.
இடைக்கால நியமனம்
இந்தநிலையில், ஜெயசூரிய, இந்தியாவுக்கு எதிரான உள்நாட்டுத் தொடர் மற்றும் இங்கிலாந்துக்கு டெஸ்ட் சுற்றுப்பயணத்திற்கு இடைக்கால தலைமை பயிற்சியாளராக பணியாற்றினார்.
அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற 20க்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளில், இலங்கையின் மோசமான செயல்பாட்டுக்கு பிறகு தலைமைப் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் மற்றும் ஆலோசகர் பயிற்சியாளர் மஹேல ஜெயவர்த்தன ஆகியோர் பதவி விலகியதைத் செய்ததைத் தொடர்ந்து இந்த இடைக்கால நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

வசீகரிக்கும் அழகுடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

ஆனந்தியின் கர்ப்பத்திற்கு யார் காரணம், வெளிவந்த உண்மை.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
