ஜனாதிபதி செயலணிக்கு தலைமை வகிக்கும் குற்றவாளி - நகைச்சுவை என்கிறார் சாணக்கியன்
“ஒரு நாடு ஒரு சட்டம்” என்பதற்கான வரைபை தயாரிப்பதற்காக ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டுள்ள செயலணி, “முரண்பாட்டின் வரைவிலக்கணம்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
நாட்டில் சட்டத்தை அமுல் செய்யமுடியாது போனால் எதற்காக குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் (Shanakiyan Rajaputhiran Rasamanickam) கேள்வியெழுப்பியுள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
This committee itself is the definition of irony. What is the purpose of establishing a committee if the existing law cant be implemented correctly? The appointment of a criminal to lead this committee is almost a joke in itself. pic.twitter.com/q12iayrlFT
— Shanakiyan Rajaputhiran Rasamanickam (@ShanakiyanR) October 27, 2021
மேலும், குற்றவாளி ஒருவர் இந்த குழுவுக்கு தலைமை வகிப்பது ஒட்டுமொத்தமாக ஒரு நகைச்சுவையாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்பிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் (Galagoda Aththe Gnanasara) தலைமை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri