விடுதலைப் புலிகளின் தலைவர் இருந்தால் செய்தி அதிரடியாக தான் வரும்! சாணக்கியன்
பிரபாகரன் உயிரோடு இருந்தால் அது தொடர்பான செய்தி அதிரடியாக தான் வரும் என்பது தனது எதிர்பார்ப்பு என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக அண்மையில் பழ நெடுமாறன் கருத்தொன்றை வெளியிட்டிருந்தார்.
இது தொடர்பில் கூறும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயரை வைத்துக் கொண்டு தொடர்ச்சியாக இவ்வாறான கருத்துக்களை ஒவ்வொருவரும் மாறி மாறி போடுகின்றமை வழமை.
தெளிவாக ஆராய வேண்டிய விடயங்கள்
பிக்குமார் அரசியலமைப்பை எரிக்கிறார்கள். எரித்த பிக்குவை சுட்டதாக அவர் ஊடக சந்திப்பொன்றை நடத்துகிறார்.
அரசியலமைப்பை எரித்த பிக்கு தன்னை சுட வந்ததாக கண்ணீர்விட்டு அழுகிறார். அதேநேரத்தில் இப்படியான ஒரு செய்தி வருகிறது.
இவை அனைத்தையும் அவதானித்து நாம் தெளிவாக ஆராய வேண்டும்.
பிரபாகரன் உயிரோடு இருந்தால் நேரடியாக வந்து அவர் அதை மக்களுக்கு சொல்வார் என நான் எதிர்பார்க்கிறேன்.
கடந்த காலத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பு இயங்கிய விதத்தை வைத்து இந்த விடயத்தை சொல்கிறேன் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை இலங்கை தமிழரசு கட்சியின் தேற்றாத்தீவு மற்றும் மாங்காடு வட்டாரங்களுக்கான கிளைக் காரியாலயம் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று தேற்றாத்தீவு பகுதியில் இடம்பெற்றது.
இதன்போது உரையாற்றிய சாணக்கியன்,கடந்த தேர்தலிலே இந்த வட்டாரத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட பெண் ஒருவரே தெரிவு செய்யப்பட்டார் அவர் தெரிவு செய்யப்பட்டதன் பிற்பாடு இந்த வட்டாரத்தில் அவர் செய்த அபிவிருத்திகளை நீங்களே பார்க்கலாம்.
இந்த தேர்தலில் ஏனைய சின்னங்களில் போட்டியிடுபவர்கள் எமக்கு தெரிந்தவர்கள் தான் ஆனால் இந்த தேர்தலில் நீங்கள் அனைவரும் எமது சொந்த உறவினர்கள் என்று வாக்களிக்கும் தேர்தல் இது அல்ல இது நமது தமிழ் மக்களினுடைய அரசியல் உரிமைகளுக்காக வாக்களிக்கின்ற ஒரு தேர்தல்.
கடந்த தேர்தலில் மொட்டு படகு போன்ற சின்னங்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வழங்கப்பட்ட வாக்குகளை விட அதிகமான வாக்குகள் கிடைக்கப்பெற்றது இங்கு தொல்பொருள் என ஆலயங்கள் அடையாளம் காணப்படுகின்ற போதும் காணிகள் அபகரிக்கப்படுகின்ற போதும் நாங்கள் அதற்கு எதிராக போராடி வருகின்றவர்களை இடையிலே திரும்பி அனுப்புகின்றோம்.
கொழும்புக்கு சென்று நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக கதைக்கின்ற போது சொல்வார்கள் நீங்கள் வீட்டு சின்னத்தில் 70 ஆயிரம் வாக்குகளை பெற்றீர்கள் ஒரு லட்சம் வாக்குகள் வியாழேந்திரன் பிள்ளையான் போன்றவர்கள் எடுத்தார்கள் அவர்கள் வாரான விடயங்களுக்கு எதிர்ப்பான கருத்துக்கள் முன் வைக்கவில்லை.
நாடாளுமன்றத்திற்கு சென்று நாங்கள் அங்கு பிரச்சனைகளை கதைப்போம் அப்போது அங்கு இருப்பவர்கள் கொட்டியா என எங்களை பேசுவார்கள் அவர்கள் அவ்வாறு சொல்லும் பொழுது நாங்கள் அவர்களுக்கு நாய் என கூறுவோம் இவர் மாறி மாறி நாங்கள் சண்டை பிடிக்கின்றோம்.
ஆனால் அண்மையில் நாங்கள் கருப்பு சுதந்திர தினம் ஒரு நிகழ்வினை கல்லடி பாலத்தின் அருகில் செய்து இருந்தோம் இதனை செய்துவிட்டு அடுத்த நாடாளுமன்ற அமர்வுக்கு நாங்கள் செல்கின்ற போது அங்கு ஒரு அமைச்சர் கூறுகின்றார் சிரித்து விட்டு நல்ல ஒரு ஷோ காட்டி விட்டு வந்திருக்கின்றீர்கள் என கூறுகின்றார்.
பல ஆண்டுகளாக எமது பிள்ளையார் ஆலயத்திற்கு தீர்த்த கிணறு இல்லாமல் இருந்தது எத்தனையோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனக்கு முதல் இருந்தார்கள், தல அரசியல் பிரமுகர்கள் இருந்தார்கள், சிவனேசதுரை சந்திரகாந்தன் முதலமைச்சராக இருந்தார், அவரால் கூட செய்ய முடியாத இந்த வேலையினை 21 வயதினிலே நான் அமைப்பாளராக இருக்கும் பொழுது அந்த வேலை திட்டத்தினை ஆரம்பித்து வைத்தோம்.
எமது கட்சியைப் பொறுத்தவரையில் தமிழ் மக்களினுடைய அரசியல் பிரச்சினைகளுக்காகவும் நாங்கள் மன்னிப்போம் அபிவிருத்தி பணிகளையும் செய்து இருக்கின்றோம்.
வீட்டு சின்னத்தை எடுத்துக் கொண்டு ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட நாம் செல்லலாமா போட்டியிடலாம் பணம் கட்டலாம் எமது வீட்டு சின்னத்தில் கேட்பதற்கு வேட்பாளர்கள் வருவார்களா.
அவர்களுடைய சின்னங்களான மொட்டு டெலிபோன் போன்ற சின்னங்களிலேயே அவர்கள் போட்டியிட செல்வார்கள் ஆனால் எங்களுடைய மாவட்டத்தில் டெலிபோன், ஹெலிகாப்டர் ஆகிய சின்னங்கள் கேட்கின்றது.
மொட்டு கட்சியினுடைய தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச சொல்லி இருக்கின்றார் நாங்கள் இம்முறை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் படகு, கப்பலில் போட்டியிடுகின்றோம்.
எங்களுடைய மக்களை படகையும் மொட்டையும் இங்கு இறக்கி ஏமாற்றுகின்றார்கள் இதனை எவ்வாறு துணிச்சலாக கூறுகின்றார் அவ்வாறாயின் மட்டக்களப்பில் இருப்பவர்கள் மடையர் என எண்ணுகின்றாரா.
இந்த அரசாங்கத்தினுடைய நிலையை பாருங்கள் நாட்டில் நோயாளிகளுக்கு பெனடோல் இல்லாத நிலை, புற்று நோயாளிகளுக்கு மருந்து இல்லை, சீனி வியாதி இருப்பவர்களுக்கு இன்சுலின் இல்லை இவ்வாறான நேரத்தில் பொய்யான ஆசை வார்த்தைகளை உங்களுக்குச் சொல்லி எதிர்காலத்தில் தேற்றாத்தீவினை மலேசியா போன்று நாங்கள் ஆக்குவோம் என்று பொய் சொல்லி கூறிவிட்டு செல்ல முடியாது.
நாங்கள் எங்களால் மக்களுக்கு செய்யக்கூடிய வேலைகளை செய்வோம் நாங்கள் மக்களை பொய்யான வார்த்தைகளை சொல்லி ஏமாற்றி விட்டுச் செல்ல மாட்டோம்.
பலர் தேர்தல் காலத்தில் வந்து பல பொய்களை கூறுவார்கள் அவர்களுடைய நோக்கம் சுயேச்சை குழுவிலோ அல்லது கட்சியிலோ இருந்து 10 லட்சம் ரூபாய் பணம் கொடுக்கப்பட்டிருக்கின்றது எமது கட்சியில் தாக்கல் செய்ததற்கு வேட்பாளர்களிடம் இருந்து பணத்தினை பெற்றோம் ஆனால் மற்ற கட்சியில் இருப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் பணம் கொடுக்க பட்டு இருக்கின்றது.
நான் கேள்விப்பட்டேன் 10 லட்ச ரூபாய் பெற்றுக் கொண்டு அதில் ஒரு லட்சம் ரூபாயை அயல் வட்டாரத்தில் சப்பட்டை போத்தல்களுடன் பார்ட்டி நடந்ததாக. 10 லட்சம் கிடைக்கப் பட்டிருக்கின்றது, வேட்பாளராக நியமனம் கிடைக்க பெற்று இருக்கின்றது, ஒரு லட்சம் ரூபாய் பார்ட்டி வைக்கப்பட்டிருக்கின்றது, மிகுதி ஒன்பது லட்சத்தினை வங்கியில் வைப்பில் இடுகின்றார் வேட்பாளர்.
இவர்களுக்கு என்ன தேவை தெற்கில் இருக்கும் நிகழ்ச்சி நிரல்களுக்கு இணங்க எங்களுடைய கட்சிக்கு 400 ஒரு வாக்குகள் கிடைக்கப்பெறும் மிகுதி 600 வாக்குகளை பிரிப்பது அவர்களுடைய வேலை.
வீட்டுச் சின்னத்தை தவிர ஏனைய சின்னங்களில் போட்டியிடும் எவராக இருந்தாலும் இது எங்களுடைய ஒரு இனத்துக்கான தேர்தல் மற்றது இன்னும் ஒன்று உள்ளது தேர்தலில் வாக்கு போடுவது என்பது உங்களுக்கும் இறைவனுக்கு மாத்திரமே தெரியும்.
கடைசி நேரத்தில் தேர்தல் காலங்களில் அரிசி, பருப்பு, சீனி, மா, பால்மா, சாராய குப்பி என கொண்டு வருவார்கள் அவற்றைக் கொண்டு வந்தால் அவை அனைத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள் ஏனெனில் அவர்கள் அவர்களுடைய சொந்த பணத்தில் அவற்றை கொண்டு வரவில்லை ஒன்று ராஜபக்சே கம்பெனியினால் வழங்கப்பட்ட காசு இல்லை எனில் நமது மாவட்டத்தில் இருக்கின்ற மண்வளங்களை எல்லாம் விற்று வந்த காசு, அல்லது எங்களுடைய அரச காணிகளை பிடித்து தங்களுடைய விருப்பப்பட்டவர்களுக்கு கொடுத்து வழங்கப்படும் காசு தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் திகதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இலங்கையில் வாழும் பல லட்சக்கணக்கான மக்கள் தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றார்கள் 10 ஆயிரத்துக்கு அதிகமான வேட்பாளராக மாத்திரம் தயாராகிக் கொண்டிருக்கின்றார்கள்.
நூற்றுக்கணக்கான சுயேட்சை குழு மற்றும் கட்சிகள் தங்களுடைய நேரத்தினை ஒதுக்கி
தங்களுடைய நிதியினை ஒதுக்கி தங்களுடைய கூடிய கவனத்தில் நீங்கள் செலுத்தி
வேட்பமான தாக்கல் செய்திருக்கின்றார்கள்.
வேட்பாளர்கள் தங்களுடைய பகுதிகளில் பிரச்சாரங்களை ஆரம்பித்திருக்கின்றார்கள் இங்கு போன்று பல இடங்களில் அலுவலகங்கள் திறக்கப்பட்டு இருக்கின்றது. தபால் மூல வாக்கெடுப்பு தொடர்பாக கச்சேரியில் இடம்பெற இருந்த கூட்டத்திற்கு எங்களுடைய 15 பேர் பிரதேச சபைகளிலும் இருந்து தேர்தல்கள் ஆணையாளர் கேட்டதற்கு இணங்க தயார்படுத்தி இன்று அந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான ஆயத்தங்கள் செய்யப்பட்டிருந்தது.
இவ்வாறான ஒரு நேரத்தில் இது ஒரு புது செய்தி ஜனாதிபதி கூறி இருக்கின்றார் அல்லது அரசாங்கம் கூறியிருக்கின்றது எங்களுடைய இலங்கை அர்ச்சகத்திற்கு தேர்தலுக்கான வாக்கிடும் சீட்டு அச்சிடுவதற்கான பணம் ஒதுக்கப்படவில்லை என இவ்வாறு தேர்தலை பின் போடுவதற்கான மிகக் கீழ்த்தரமான எல்லா சதிகளையும் செய்து பார்த்தார்கள் நீதிமன்றத்திற்கும் சென்றார்கள் இவை அனைத்திலும் தேர்தலை நடத்துங்கள் மக்களுடைய ஜனநாயக உரிமைக்கு மதிப்பளியுங்கள் என ஜனாதிபதிக்கு கூறிய போதும் இறுதி முயற்சியாக நிதி இல்லை அதனால் அச்சிட முடியாது எனக் கூறி நேற்றைய தினம் தபால் மூல வாக்கெடுப்பு தற்காலிகமாக பிற்படுபோடப்பஞ்டுள்ளது என செய்தி வந்துள்ளது.
இன்று காலை மறுபடியும் தேர்தல் நடக்கும் என்ற செய்தி வந்திருக்கின்றது.
ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டினுடைய ஜனாதிபதி ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் ஒரு நாட்டினுடைய தலைவர் எவ்வாறு செயல்பட வேண்டும் என ஒரு உரையிலேயே கூறி இருக்கின்றார் இதுவா உங்களுடைய தலைமைத்துவ பண்புகள்.
50 வருடங்களாக அரசியல் இருப்பது முக்கியமல்ல எங்களுடைய மக்களினுடைய எதிர்காலத்தை சிந்திப்பவராக இருக்க வேண்டும் அந்த அடிப்படையில் தேர்தல் நிச்சயமாக நடக்கும் ஏனென்றால் அந்த தேர்தலை அவர் பிற்படுவாராக இருந்தால். மக்கள் போராட்டம் செய்யாமல் ஆர்ப்பாட்டங்கள் செய்யாமல் வீட்டில் இருக்கின்றார்கள் அதற்கான காரணம் பொருளாதார சிக்கல்.
ஆனால் இந்த தேர்தலினை பிற்போட்டால் வடக்கு கிழக்கில் இருக்கும் தமிழ் மக்கள் நாங்கள் காத்துக் கொண்டிருக்கின்றோம் எங்களுடைய அரசியல் உரிமைக்காக தமிழ் மக்களினுடைய ஆதரவு இருக்கின்றது என்ற செய்தியை சொல்வதற்கு வீட்டு சின்னத்திற்கு வாக்களிப்பதற்கு மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இவ்வாறான நிலையில் தெற்கில் இருக்கும் இவ்வாறான ஊழல்வாதிகளை ராஜபக்ஷ கம்பெனி ராஜபக்ச குடும்பத்தினர் ரணில் விக்கிரமசிங்க போன்றவர்களை மக்கள் நிராகரித்து விட்டோம் ஜனநாயக வழியிலும் நிராகரிப்பதற்கு தயாராக இருக்கின்றார்கள்.
கொழும்பிலே காலி முகத்தழில் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் இன்று ஜனாதிபதி கூறுகின்றார் போதைக்கு அடிமை ஆனவர்கள் என்று இல்லை உங்களை இந்த நாட்டு மக்கள்தான் நிராகரித்தார்கள் கோட்டாவை விரட்டி அடித்தார்கள் என்ற செய்தியினை ஜனநாயக வழியிலே சொல்வதற்கான ஒரு சந்தர்ப்பமே மார்ச் மாதம் ஒன்பதாம் திகதி இந்த சந்தர்ப்பத்தை மக்களிடம் இருந்து ஜனாதிபதி பறிக்க நினைத்தால் முயற்சி எடுப்பாராக இருந்தால் அது நடக்கப் போவதில்லை தேர்தல் நடக்கும் தேர்தல் நடத்த வைப்போம் ஆனால் அந்த உரிமையினை இன்னுமும் பறிக்க நினைப்பார்.
ஆனால் கோட்டபாய ராஜபக்சே முகம் கொடுத்த கோட்டா கோகமையையும் பார்க்கிலும் அதைவிட பத்து மடங்கு அதிகமான எதிர்ப்பை ரணில் கோகம என்ற பெயரிலே வரலாம் மக்கள் தொடர்ந்து வீட்டில் இருக்க மாட்டார்கள் தங்களுடைய ஜனநாயக சுதந்திரம் மறுக்கப்பட்டால் வீதிக்கு வருவார்கள் நாங்கள் வரவழைக்க வேண்டிய தேவையில்லை மீண்டும் நாடு ஒரு குழப்ப நிலைக்குள் செல்லும் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு வார்த்தை இல்லாமல் போகும். ரணில் ஜாக்கிரதை என்று தான் நான் கூற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
செய்தி-குமார்





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
