போராட்டத்தை காட்டிக் கொடுத்த சில அரசியல்வாதிகள் அரசாங்கத்தின் மடியில் - சாணக்கியன் சீற்றம்
ஜனநாயகப் போராளி அமைப்பில் இருக்கும் சில நபர்களை குறிவைத்து இந்த அரசாங்கம் விசாரணை நடத்துவது மட்டுமல்லாமல் கைது செய்து கொண்டு வருகின்ற செயற்பாடு ஒரு கேவலமான செயல் என்று இரா.சாணக்கியன் சீற்றம் வெளியிட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
புனர்வாழ்வு அளிக்கப்படாமல், போராட்டத்தை காட்டிக் கொடுத்த சில அரசியல்வாதிகளை உங்களது மடியில் வைத்துக் கொண்டு இருக்கின்றீர்கள். எமது இனத்துக்காக போராடி ஜனநாயக வழியிலேயே அரசியலில் கால் பதித்து வருபவர்களை கைது செய்வதை மிக வன்மையாக கண்டிக்கின்றேன்.
இது இந்த அரசாங்கத்தின் ஒரு கேவலமான செயற்பாடு என்பதை நாம் உணர வேண்டும். இதுவே இன்று நடக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.