சபை அமர்வின் இடையே திடீரென போராட்டத்தில் குதித்த சாணக்கியன்: வேடிக்கை பார்த்த பிள்ளையான் (Video)
நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உள்ளிட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றையதினம் நாடாளுமன்றத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் அவர்களுக்கு முன்னால் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.
மட்டக்களப்பு - மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரை பிரச்சினை தொடர்பில் தீர்வு கோரி இவர்கள் உள்ளக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எமது நிலம் எமக்கு வேண்டும்..
இன்றைய சபை அமர்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு பேசுவதற்கான சந்தர்ப்பம் வழங்கிய போது, உரையாற்ற ஆரம்பித்த சாணக்கியன் திடீரென பதாதைகளை தாங்கிய வண்ணம், சபையின் நடுவே வந்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தினை ஆரம்பித்தார்.
சாணக்கியனை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், கலையரசன், வினோ நோகராதலிங்கம் உள்ளிட்டோரும் சபைக்கு நடுவே வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எமது நிலம் எமக்கு வேண்டும், எமது நிலங்கள் மற்றும் வளங்களை அழிக்காதே என கோஷமிட்டு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது ஆளும்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர். அதிலும் குறிப்பாக மட்டக்களப்பை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் ஆளும் கட்சியினரோடு இணைந்து போராட்டத்துக்கான எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.

மலைபோல் குவிந்துள்ள சொத்தில் 1 சதவீதம் மட்டுமே பிள்ளைகளுக்கு... பில்கேட்ஸ் கூறும் காரணம் News Lankasri

ஜேர்மனி போன்று உக்ரைனும் இரண்டாகப் பிளக்கப்பட வேண்டும்... ட்ரம்பின் சிறப்பு தூதுவர் புதிய திட்டம் News Lankasri
