13ஐ எரித்த பிக்குவிற்கு எதிராக 21 குற்றச்சாட்டுக்கள்! சபையில் அம்பலமான விடயம் - செய்திகளின் தொகுப்பு
நாடாளுமன்றத்திற்கு முன்பாக அரசியலமைப்பின் ஒரு பகுதியான 13வது திருத்தச் சட்டத்தை எரித்த பிக்குவிற்கு எதிராக 21 குற்றச்சாட்டுக்கள் உள்ளதாக தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், இவ்வாறு 21 வழக்குகள் உள்ள ஒரு பௌத்த பிக்கு நாடாளுமன்றத்திற்கு முன்பாக இவ்வாறு அரசியலமைப்பின் ஒரு பகுதியை எரித்த போது கைகட்டி வேடிக்கை பார்த்த அரசாங்கம் வேறு மதத்தலைவர்கள் வெற்று காகிதத்தை எரித்திருந்தால் அவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கும்.
தற்போது 13வது திருத்தச்சட்டம் என்ற ஒன்றை பேசுபொருளாக்கியுள்ளதற்கு காரணம் அரசியல் அநாதைகள் வெறுங்கையுடன் செல்லாது எதையாவது ஒரு கோசத்தை மக்கள் முன் கொண்டு செல்வதற்காகவே ஆகும் என கூறியுள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான இரவு நேர செய்திகளின் தொகுப்பு,
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan
என் அப்பா பார்த்துக்கொள்வார்; 3 பேரை கார் ஏற்றிக்கொன்ற பின் திமிராக பேசிய 19 வயது இளைஞர் News Lankasri