நான் பிள்ளையானின் கட்சியல்ல! ஹரிஸிற்கு சாணக்கியன் பதிலடி
தன்னை பற்றி ஹரிஸ் எம்.பி நேற்றைய தினம் நாடாளுமன்றில் முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு இன்றைய தினம் சாணக்கியன் எம்.பி பதிலடி வழங்கியுள்ளார்.
இதன்போது அவர் குறிப்பிடுகையில்,
நேற்றைய தினம் ஹரிஸ் எம்.பி நான் சபைக்குள் இல்லாத போது என்னை பற்றிய சில தவறான தகவல்களை வெளியிட்டிருந்தார்.
அதில் ஒன்று மாத்திரம் உண்மை. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை பற்றி சொல்லியிருந்தார். அது தமிழ் மக்களின் இனப்போராட்டத்தை காட்டிக் கொடுத்த கட்சியென்று.
அது ஒன்று தான் உண்மை. பிள்ளையானின் கட்சி தமிழ் மக்களை காட்டிக் கொடுத்த கட்சி தான். ஆனால் நான் அந்த கட்சியில் ஒருநாளும் அமைப்பாளராக செயற்படவில்லை.
அது பொய்யான ஒரு விடயம். இரண்டாவது நான் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் ஒரு அமைப்பாளராக கடமையாற்றியிருந்தேன்.
ஆனால் அந்த கட்சி தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை செய்யும் போது கட்சியை விட்டு விலகியிருந்தேன் என குறிப்பிட்டுள்ளார்.
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
அப்பாவின் கார்பன் காப்பி... ஜாய் கிறிஸில்டாவின் புதிய பதிவு! சிக்கப்போகும் மாதம்பட்டி ரங்கராஜ் Manithan