ஜனாதிபதிக்கு சாணக்கியன் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
தமிழருக்கு நாட்டில் உரிமை உண்டு. இதுதான் தருவேன் எடுத்துக்கொள்ளுங்கள் என்று எமக்கு ஜனாதிபதி பிச்சை போட்டு ஏமாற்ற வேண்டாம்.எமக்கான உரிமைகளை சரியான முறையில் தராவிடின் ஜனாதிபதி வீடு செல்ல நேரிடும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் எச்சரித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (20.07.2023) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிச்சை போட்டு ஏமாற்ற வேண்டாம்
அண்மையில் ஜனாதிபதி தமிழ் மக்கள் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கூட்டத்தில், நான் ரணில் ராஜபக்ச அல்ல.நான் ரணில் விக்ரமசிங்க என்று குறிப்பிட்டிருந்தார்
அத்துடன் தான் வழங்கபோவதினை நீங்கள் ஏற்றுகொள்ள போகின்றீர்களா இல்லையா என்று ஜனாதிபதி கேட்கின்றார் என சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
தமிழருக்கு நாட்டில் உரிமை உண்டு,நான் இதுதான் தருவேன் எடுத்துக்கொள்ளுங்கள் என்று எமக்கு பிச்சை போட்டு எம்மை ஏமாற்ற வேண்டாம் எனவும் சாணக்கியன் ஜனாதிபதியை சாடியுள்ளார்.
ஜனாதிபதியும் விரைவில் வீடு செல்ல வேண்டி வரும், எமக்கான உரிமைகளை சரியான முறையில் தராவிடின் நாட்டுக்கான கடன் அதிகரிக்குமே தவிர முதலீடுகள் கிடையாது எனவும் சாணக்கியன் எச்சரித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri
