தமிழர் பகுதியில் மாதவிடாய் காலத்தில் பெண்களை பொலிஸார் முன் உடை மாற்ற சொல்கிறார்களா..! வெடித்தது புதிய சர்ச்சை
மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக நடைபெற்ற சமுர்த்தி பயனாளிகளின் போராட்டத்திற்கு மத்தியில் பெண்கள் சிலர் பாரிய அசௌகரியத்தை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் ஊடகத்திற்குக் கருத்து தெரிவித்தபோது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது, இரவு முழுவதும் சுமார் 20ற்கும் அதிகமான பெண்கள் தமது பிள்ளைகளுடன் வருகை தந்து, இந்த செயலகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோம்.
அவர்களில் அதிகமானவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு அசௌகரியத்தை எதிர்கொண்டனர். அதன்போது சுத்தம் செய்வதற்குக் கூட இடமளிக்காது பொலிஸார் மரித்து வைத்து, அவர்களை உள்ளே விடாது தடுத்து வைத்திருந்தனர்.
அவ்வாறாயின் அவர்கள் என்ன விரும்புகின்றனர், பெண்கள் அவ்விடத்திலேயே நின்று அவர்களுக்கு முன்னால் உடைகளை மாற்றக் கூறுகின்றார்களா, மன்னார் பெண்களுக்காக நியாயம் கேட்டு வருபவர்களுக்கு இது தானா சட்டம்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
முதலாம் இணைப்பு
நலன்புரி நன்மைகள் சபையினால் வெளியிடப்பட்டிருக்கும் புதிய சமுர்த்தி பயனாளிகளை அடையாளப்படுத்தும் மதிப்பீட்டு அறிக்கையில் மன்னாரில் விடுபட்ட,மற்றும் உள் வாங்கப்படாத பயனாளிகள் முன்னெடுத்த போராட்டம் நிறைவுபெற்றுள்ளது.
கடந்த மூன்று நாட்களாக மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக சமுர்த்தி பயனாளிகள் ஒன்று கூடி, முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டமானது இன்றைய தினம் (23.06.2023) முடிவுக்கு வந்துள்ளது.
நலன்புரி நன்மைகள் சபையினால் வெளியிடப்பட்டிருக்கும் புதிய சமுர்த்தி பயனாளிகளை அடையாளப்படுத்தும் மதிப்பீட்டு அறிக்கையில், மன்னாரில் விடுபட்ட, மற்றும் உள் வாங்கப்படாத பயனாளிகள் நூற்றுக்கணக்கானவர்கள் ஒன்று கூடி, தமக்கு உரிய தீர்வு வேண்டும் என கோரிக்கை விடுத்து இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டச் செயலகத்திற்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீர் எனப் பிரதான வீதிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதையடுத்து, இதனால் அப்பகுதியில் போக்குவரத்து சேவைகள் சிறிது நேரம் பாதிப்படைந்துள்ளது. பொலிஸார் விசேட கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன், ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் செயலாளர் டானியல் வசந் ஆகியோர் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் சிலரை அழைத்து அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சார்பாகக் கலந்து கொண்டவர்கள் தமது பிரச்சினைகளை எடுத்துக் கூறியுள்ளனர்.
குறிப்பாக நலன்புரி நன்மைகள் சபையினால் வெளியிடப்பட்டிருக்கும் பட்டியலில் பணம் வசதி உடைய மற்றும் மாடி வீடுகளில் வசிப்பவர்களும் உள்வாங்கப்பட்டிருப்பதாகவும் ஆனால், தேவையுடைய மாற்றுத்திறனாளிகள், விதவைகள், சிறுநீரக நோயாளிகள், சொந்த வீடு இல்லாதவர்கள், உட்பட பலரின் பெயர் உள்ளடக்கப்படவில்லை என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் ஏற்கனவே பொருளாதார நெருக்கடி, விலைவாசி அதிகரிப்பினால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சஜித் பிரேமதாசவின் வீட்டுத் திட்டத்தினால் கடனாளிகளாக உள்ளதாகவும் இன்னும் பல பெண்கள் நுண்நிதி நிறுவனக்களில் கடன் பெற்று வாழும் இவ்வாறான நிலையில் சமுர்த்தி கொடுப்பனவு பட்டியலில் தங்கள் பெயர் நீக்கப்பட்டமை தங்களை ஏழ்மையில் தள்ள அரசாங்கம் மேற்கொள்ளும் வேலை என பாதிக்கப்பட்ட பெண்கள் போராட்டத்தின் போது தெரிவித்துள்ளனர்.
இதன்போது பதில் வழங்கிய அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமேல், குறித்த திட்டம் நாடு முழுவதும் ஒரு திட்டத்தினுல் கொண்டு வரப்பட்டுள்ளது. உங்கள் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படாத அல்லது நிராகரிக்கப்பட்டுள்ளவர்கள் மேன்முறையீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும்.
குறித்த மேன்முறையீடு விண்ணப்பம் இம்மாதம் 30ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும். பிரதேசச் செயலகங்களில் இதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஒரு திட்டத்தினூடாக முன்னெடுக்கப்பட்டுள்ளமையினால் என்னால் அல்லது பிரதேச செயலாளரினாலே எதுவும் செய்ய முடியாது.
இந்த நிலையில் உங்கள் பிரச்சினையை சமர்ப்பிப்பதற்கு எதிர்வரும் 30ஆம் திகதி வரை சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. 30ஆம் திகதிக்கு பின்னர் ஒவ்வொரு பிரதேச செயலகங்களுக்கும் விசாரணைக்குழு நியமிக்கப்படும்.
அந்த விசாரணைக்குழு உங்கள் மேன்முறையீட்டு விண்ணப்பத்தை பரிசீலனை செய்து உங்களிடம் விசாரணைகளை மேற்கொள்வார்கள்.
அதன் பின்னரே தெரிவு பட்டியிலில் தகுதி உள்ளவரா? இல்லையா என்ற தெரிவு இடம்பெறும். அதன் பின்னர் இறுதி தெரிவு பட்டியல் அனுப்பப்படும். தற்போது இணையத்தில் வெளிவந்துள்ள பெயர் பட்டியல் இறுதி தெரிவு பட்டியல் இல்லை.
நீங்கள் ஆரம்பத்தில் வழங்கிய தகவலின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல் பதிவேற்றப்பட்டுள்ளது. எதிர்வரும் 30ஆம் திகதி வரை உங்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஏனைய மாவட்டங்களிலும் இவ்வாறு இடம்பெற்றுள்ளது. பெயர் நீக்கப்பட்டுள்ளது. அவர்கள் மேன்முறையீட்டை மேற்கொண்டு வருகின்றனர்.
எனவே அனைவரும் மேன்முறையீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு அதன் பின் மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan
