திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்ட மறைந்த சம்பந்தனின் பூதவுடல்
புதிய இணைப்பு
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மூத்த தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடல் யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலைக்கு இன்று (05) காலை விமானம் மூலமாக கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளைத் தலைவர், கதிரவேலு சண்முகம் குகதாசன், இரா.சம்பந்தனின் மகன் சஞ்சீவன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் சீனக்குடா விமான நிலையத்தில் காத்திருந்து சம்பந்தனின் பூதவுடலை பொறுப்பேற்றனர்.
இதனையடுத்து சம்பந்தனின் பூதவுடல் திருகோணமலையில் உள்ள அவரது இல்லத்துக்கு வாகனம் மூலமாக அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டது.
முதலாம் இணைப்பு
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மறைந்த இராஜவரோதயம் சம்பந்தனது (R. Sampanthan) பூதவுடல்
யாழ்ப்பாணத்தில் (Jaffna) இருந்து இன்றையதினம் விமானம் மூலம் திருகோணமலைக்கு எடுத்துச்
செல்லப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் சம்பந்தனின் பூதவுடலுக்கு நேற்று பலரும் அஞ்சலி செலுத்தினர்.
பொதுமக்கள் அஞ்சலி
இதனை தொடர்ந்து, தந்தை செல்வா கலையரங்கில் இருந்து இன்று (05) காலை கார் மூலம் பலாலி விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து திருகோணமலைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில், சம்பந்தனின் பூதவுடல் திருகோணமலையில் இரண்டு தினங்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் நாளை மறுநாள் (07) இறுதிக்கிரியை நடைபெற்று தகனம் செய்யப்படவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
















செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 12 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
