என்னை பதவி விலக சொல்வதற்கு சுமந்திரன் யார்..! கேள்வி எழுப்பிய சம்பந்தன்
“என்னை பதவி விலக சொல்வதற்கு சுமந்திரன் யார்?” என சம்பந்தன் கேள்வியெழுப்பியுள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இரா.சம்பந்தன் விலக வேண்டும் என சக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் விடுத்த கோரிக்கை தொடர்பாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பாக இரா.சம்பந்தன் தம்முடன் கருத்துக்களை பரிமாறிக் கொண்டதாக மாவை சேனாதிராஜா கூறியுள்ளார்.
அத்துடன் தம்மை நேரடியாக கொழும்பில் சந்திக்குமாறு சம்பந்தன் கோரியிருப்பதாகவும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளாார்.

செயற்குழு கூட்டத்தில் கலந்துரையாடல்
இந்நிலையில் என்னை பதவி விலக சொல்லி சொல்வதற்கு சுமந்திரன் யார்? என சம்பந்தன் என்னிடம் கேட்டதாக மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் விரைவில் நேரடியாக சந்தித்து இரா.சம்பந்தனுடன் இது தொடர்பாக கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே இலங்கை தமிழரசுக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்திலும் இது தொடர்பாக கலந்துரையாடப்படும் எனவும் மாவை சேனாதிராஜா கூறியுள்ளார்.
எனினும் அடுத்த மாதம் 5 ஆம் திகதி வவுனியாவில் இந்த செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக அதில் இரா.சம்பந்தன் கலந்துகொள்வதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த செயற்குழுக் கூட்டத்தில் இரா.சம்பந்தனின் பதவி விலகல் குறித்து தீர்மானம் மேற்கொள்ளப்படுமா என எழுப்பிய கேள்விக்கு மாவை சேனாதிராஜா பதில் அளிப்பதை தவிர்த்துக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri