வழங்கப்பட்ட உயர் பதவியை நிராகரித்த சம்பந்தன்
இந்திய - இலங்கை நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் கூட்டம் நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றதுடன் அதில் 125 க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொண்டதாக தெரியவருகிறது.
கூட்டத்தின் போது இந்திய - இலங்கை நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக அமைச்சர் சமல் ராஜபக்ச(Chamal Rajapaksa) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பிரதித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் (R.Sampanthan) தெரிவு செய்யப்பட்ட போதிலும் அவர் அந்த பதவியை நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேவேளை இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும், நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுக்கும் இடையில் அண்மையில் தொலைபேசி கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
You My Like This Video