திருகோணமலையில் அமைக்கப்படவுள்ள விகாரை குறித்து ஜனாதிபதிக்கு சம்பந்தன் கடிதம்
திருகோணமலை, இலுப்பைக்குளத்தில் பௌத்த விகாரை ஒன்றை அமைப்பதன் காரணமாக அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை, பிராந்தியத்தில் திட்டமிடப்பட்ட வெளிநாட்டு முதலீடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று எச்சரித்து, ஜனாதிபதிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் கடிதம் எழுதியுள்ளார்.
99 வீதமான தமிழர்கள் வாழும் இந்தப்பிரதேசத்தில் விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளமை அந்த பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கணிசமான அபிவிருத்தி
அது நீடித்தால் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படும் எனவும் சம்பந்தன் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும்,அந்த இடத்தில் உள்ள பௌத்த நினைவுச்சின்னங்கள் பராமரிக்கப்படக் கூடாது என்று தாம் கூறவில்லை என கூறியுள்ளார்.
குறிப்பாக வெளிநாட்டு முதலீட்டுடன் கணிசமான அபிவிருத்தியை கருத்தில் கொள்ளும்போது சமூக சூழலை சீர்குலைக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
