சம்பந்தன் தமிழ் மக்களின் ஆணிவேர்: நாடாளுமன்ற உறுப்பினர் கவலை
தமிழ் மக்களின் ஆணிவேராக நோக்கப்படும் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா. சம்பந்தன் (R. Sampanthan) காலமான செய்தி அறிந்து மிகவும் கவலை அடைந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் (H. M. M. Harees) தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (TNA) தலைவர் ஆர்.சம்பந்தன் காலமானதையடுத்து, அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
குறித்த செய்தியில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,
சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினரான அவர் தமிழர்களின் உரிமைகளுக்காக ஜனநாயக ரீதியாக போராடிய மூத்த தலைவராக நோக்கப்படுகிறார்.
பாரிய இழப்பு
எனது சமூகம் சார்ந்த பிரச்சினைகளின் போதும், சிறுபான்மை மக்களின் உரிமை சார்ந்த பிரச்சினைகளின் போதும் அவருடன் நேருக்கு நேராகவும், தோளோடு தோளாகவும் நின்ற நாட்கள் ஏராளம்.
தன்னை சார்ந்த இனத்தின் உரிமைகளுக்காக விட்டுக்கொடுப்புக்களோ அல்லது தளர்வுகளோ இல்லாது போராடிய தலைமையை இன்று தமிழ் மக்கள் இழந்திருக்கிறார்கள் என்பதை விட அனுபவமும், ஆற்றலும் கொண்ட சிரேஷ்ட அரசியல் ஆளுமையை இலங்கை தேசம் இழந்திருக்கிறது என்பதே உண்மை” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

UPSC தேர்வில் 5 முறை தோல்வியடைந்து 6-வது முயற்சியில் ஐஏஎஸ் அதிகாரியான பெண்.., யார் இவர்? News Lankasri
