விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கு தவறான தகவல்களை வழங்கிய சம்பந்தன்! - ஆனந்தசங்கரி

Politics
By Independent Writer Mar 07, 2021 02:16 AM GMT
Report

விடுதலைப் புலிகள் அரசியலுக்கு வந்தால் தன்னுடைய அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் விடுதலைப் புலிகளை உசுப்பேத்தி அவர்களுக்கு தவறான தகவல்களை வழங்கி செய், அல்லது செத்துமடி! என்ற நிலைக்கு தள்ளிவிட்டது மட்டுமல்ல விடுதலைப் புலிகளை அழித்த சரத் பொன்சேகாவுக்கு ஜனாதிபதித் தேர்தலில் ஆதரித்து நன்றிக்கடனை தீர்த்துக் கொண்டார் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் குறித்த அறிக்கையில்,

கூட்டமைப்பின் அறிக்கை சர்வதேச சமூகத்தை ஈர்க்குமென, இரா.சம்பந்தன் ஊடகங்களுக்கு வெளியிட்ட செய்தியைப் பார்த்து சிரிப்பதா அழுவதா என தெரியவில்லை. அவர் நினைத்திருந்தால் யுத்தத்தையும் தடுத்து நிறுத்தி, விடுதலைப் புலிகளையும் ஜனநாயக அரசியலில் ஈடுபட வைத்திருக்கலாம். அப்படி ஒரு சூழ்நிலை அந்த காலகட்டத்தில் இருந்தது.

விடுதலைப் புலிகள் அழிந்தால் தமிழ் மக்களும் அழிவார்கள் என்ற விடயம் இரா.சம்பந்தனுக்கு தெரியாதா? தமிழ் மக்கள் எவ்வளவு பேர் அழிந்தாலும் பரவாயில்லை விடுதலைப் புலிகள் அழிந்தால் போதும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு, செயற்பட்ட அவர் இன்று ஐ.நா விற்கு அறிக்கை சமர்பிக்க முயற்சிக்கின்றார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அத்தனை அழிவுகளிற்கும் முக்கியமாக இரா.சம்பந்தனும் மற்றும் ஒருவரும் பொறுப்புக் கூற வேண்டும். யுத்த குற்றங்களுக்காக விசாரிக்கப்பட வேண்டிய முதல் குற்றவாளிகளும் இவர்களே.

ஏனெனில் யுத்தம் நடந்து கொண்டிருந்த போது விடுதலைப் புலிகளோடும், இலங்கை அரசோடும், நடுநிலை நாடுகளோடும் சமரசத்திற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்காது, விடுதலைப் புலிகள் மூலம் வெற்றி பெற்ற 22 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வைத்துக் கொண்டு, யுத்த அழிவுகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட சர்வகட்சி கூட்டங்களில் கலந்து கொள்ளாது தவிர்த்தார்.

விடுதலைப் புலிகள் கிளிநொச்சியில் தோல்வியடைந்தவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்னியில் அகப்பட்டுள்ள அப்பாவி மக்களை காப்பாற்ற வேண்டும் இல்லையேல் தங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை துறக்க வேண்டும் என 11.01.2009ம் திகதி எனது கடிதத்திற்கிணங்க ஏன் மக்களை காப்பாற்ற முன்வரவில்லை? எமது மக்களைக் காப்பாற்ற கடைசி சந்தரப்பம் என்று 16.03.2009ம் திகதி விடுதலைப் புலிகளின் தலைவர் தம்பி பிரபாகரனுக்கு நான் எழுதிய கடிதத்திற்கிணங்க அவர்களிடம் அணுகி நிலைமைகளை கூறி ஏன் யுத்தத்தை தடுக்க முன்வரவில்லை?

10.04.2009ம் திகதி இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஸ்ரீ. சிவசங்கர் மேனன் பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைத்த போது, யுத்தத்தை நிறுத்துங்கள் பேச்சுவார்த்தைக்கு வருகிறோம் என்று மாவைசேனாதிராஜா மூலம் மேதாவித்தனமான அறிக்கை விடுத்து தட்டிக்கழித்தார்.

02.05.2009ம் திகதி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு பல்வேறு ஆலோசனைகளுடன் அரசுக்கு ஏற்புடைய ஒரு சர்வதேச அமைப்பை தெரிவு செய்து விடுதலைப் புலிகளுடன் ஆலோசித்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற உதவுமாறு எழுதிய எனது கடிதத்திற்கு ஏற்றவாறு இரா. சம்பந்தன் அன்றைய ஜனாதிபதியுடன் கலந்து ஆலோசனை செய்து மக்களை பாதுகாக்க ஏன் முன்வரவில்லை?

பிரித்தானிய நாடாளுமன்றக் குழு இலங்கை வந்த போது இந்திய தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பாக ஒரு மிகப்பெரிய அனர்த்தம் நடக்கப் போகின்றது என்று கூறி, மெதுவாக நழுவிக் கொண்டார். யுத்த காலத்தில் அவரின் குழுவில் குறைந்தது 12 உறுப்பினர்களை வெளிநாட்டிற்கு சுற்றுலா அனுப்பிவிட்டு தற்போது இப்படியான ஒரு செய்தியை வெளியிட வெட்கம் இல்லையா?

நான் அவரை கேட்க விரும்புவது யாதெனில் அவரின் உறுப்பினர்கள் அனைவரினதும் தொலைபேசிகள் யுத்த கால இறுதி நாட்களில் இயங்கவில்லை என்ற கூற்று உண்மையா?

இலங்கை அரசின் இறுதி சர்வகட்சிக் கூட்டத்தில் இரா.சம்பந்தன் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எவரும் கலந்து கொள்ளவில்லை. அந்த நேரத்தில் நான் கலந்து கொண்டு இன்னும் மூன்று இலட்சத்திற்கு மேல் மக்கள் உணவின்றித் தவிக்கிறார்கள் என்று கூறினேன்.

அந்த வேளையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ; இன்னும் எண்பத்தையாயிரம் பேர் தான் அங்கே இருக்கிறார்கள் என்று, ஏதோ தரவுகளைக்காட்டி சுட்டிக்காட்ட, என்னால் சுட்டிக்காட்டப்பட்ட கணக்கில் நான் உறுதியாக இருக்க, 'விடுதலைப் புலிகள் நன்றாக சாப்பிட்டு சண்டை போடட்டும்' என்று தமிழில் கூறிவிட்டு மூன்று இலட்சம் பேருக்கு உணவை அனுப்புகிறேன் என்று கோவத்துடன் கூறி எழுந்து சென்றார்.

இந்த நேரத்திலாவது இரா.சம்பந்தன் உள்ளிட்ட குழுவினர் அந்த கூட்டத்திற்கு வந்திருந்தால் பலரின் பட்டினி சாவையும் தடுத்திருக்கலாம். எஞ்சியிருந்த போராளிகளையும் பாதுகாத்திருக்கலாம். இத்தனையையும் செய்யத்தவறிய இரா.சம்பந்தன் எவ்வாறு ஐ.நா விற்கான அறிக்கையை தயாரிக்கப் போகின்றார்?

எல்லாவற்றிற்கும் மேலாக 2015ம் ஆண்டு தொடக்கம் 2019ம் ஆண்டு வரை நடந்த, எதிர்க்கட்சித் தலைவர் கதிரையை அலங்கரித்த தேசிய அரசாங்கத்தில், யுத்தத்தை நடத்தி முடித்த, வெள்ளைக் கொடி விவகாரத்திற்கு பொறுப்புக் கூற வேண்டிய சரத்பொன்சேகாவுடன்; கூடிக் குலாவித் திரிந்த போது யுத்தத்தில் என்ன நடந்தது என்ற விபரங்களை அவரிடம் கேட்டுப் பெற்று அந்தக்கால கட்டத்தில் நடந்த ஐ.நா மனித உரிமை மாநாட்டிற்கு அனுப்பக்கூடிய ஒரு அறிக்கையை ஏன் சமர்ப்பிக்கவில்லை?

இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் கூறி விட்டு சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் அந்த அறிக்கையை தயாரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இரா.சம்பந்தன் அவர்களினதும் அவரின் உறுப்பினர்களினதும் கடந்த கால முரண்பாடான கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகள் பற்றி இலங்கைக்கு ஆதரவான நாடுகள் அறியும் போது, வெட்கித் தலைகுனிந்து தான் ஆக வேண்டும் என்பது அவருக்கு தெரியாதா?

இறுதி யுத்தத்தில் நடந்த குற்றங்களுக்கு முழுவதுமாக பொறுப்பேற்று பதவிகளை இராஜினாமா செய்து விட்டு, வாய்மூடி மௌனமாக இருப்பதே இரா. சம்பந்தனுக்கு நான் கூறும் அறிவுரையாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US