சுமந்திரனின் கருத்து குறித்து மாவையிடம் வருத்தம் வெளியிட்ட சம்பந்தன்!

TNA M A Sumanthiran Mavai Senathirajah R. Sampanthan
By Sheron Nov 06, 2023 12:57 AM GMT
Report

இரா.சம்பந்தன், பொதுவெளியில் தன்னை பதவி விலகுமாறு எம்.ஏ.சுமந்திரன் கூறிய கருத்தானது மனவருத்தமளிப்பதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜாவிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவுக்கும், அக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான இரு சந்திப்புக்கள் நேற்று நடைபெற்றிருந்தன.

இந்த சந்திப்பின் போதே, இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தனது மனவருத்தத்தினை தெரிவித்துள்ளார்.

மேற்படி சந்திப்புக்கள் தொடர்பில் மாவை.சோ.சேனாதிராஜா தெரிவிக்கையில், 

சுமந்திரனின் கருத்து குறித்து மாவையிடம் வருத்தம் வெளியிட்ட சம்பந்தன்! | Sampanthan Expressed Regret Sumanthiran Comment

சுமந்திரன், சம்பந்தன் தொடர்பில் வெளியிட்ட கருத்துக்களை அடுத்து சம்பந்தன் என்னை நேரில் சந்திப்பதற்கான அழைப்பினை விடுத்திருந்தார். அதனையடுத்து நான் அவருடன் இருவேறு சந்திப்புக்களை தொடர்ச்சியான நாட்களில் மேற்கொண்டிருந்தேன்.

சம்பந்தனின் மனவருத்தம்

முதலாவது சந்திப்பின்போது, சுமந்திரனின் கருத்துக்கள் தொடர்பில் அவர் மனவருத்தத்தினை தெரிவித்ததோடு, அந்த விடயம் சம்பந்தமாக விரிவானதொரு கலந்துரையாடலை மேற்கொள்ளவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன், குறித்த விடயம் சம்பந்தமாக தீர்மானமொன்றை அவர் எடுப்பார் என்ற தொனிப்படவும் கருத்துக்களை வெளிப்படுத்தினார்.

அதேநேரம், குறித்த விடயமானது கட்சியின் உள்ளக விவகாரமாக இருப்பதன் காரணமாக, அவ்விடயம் சம்பந்தமாக பொதுவெளியில் உரையாடல்களை தவிர்ப்பதோடு, விடயங்களை பூதாகரமாக்குவதை தவிர்ப்பதும் எமது நிலைப்பாடாகும்.

போர் நிறுத்தம் குறித்து பாலஸ்தீன மக்களுக்கு இஸ்ரேல் விடுத்துள்ள கோரிக்கை

போர் நிறுத்தம் குறித்து பாலஸ்தீன மக்களுக்கு இஸ்ரேல் விடுத்துள்ள கோரிக்கை


எனினும் அவ்விடயம் சம்பந்தமாக கட்சி உரியவாறான நடவடிக்கைளை முன்னெடுக்கும் என்றார்.

இதேவேளை, கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளமையால் அதுபற்றியும் சம்பந்தனுடன் கலந்துரையாடினேன்.

சுமந்திரனின் கருத்து குறித்து மாவையிடம் வருத்தம் வெளியிட்ட சம்பந்தன்! | Sampanthan Expressed Regret Sumanthiran Comment

அந்த கலந்துரையாடலின் அடிப்படையில், கட்சியின் மாநாட்டை நடத்துவதற்கான திகதியை தீர்மானதிப்பதற்கு முதலில் இணக்கப்பாடுகளை எட்டுவதென இருவரும் முடிவெடுத்துள்ளோம்.

மாநாட்டின் தீர்மானத்துக்கான உள்ளீடுகள்

அதன்பின்னர், கட்சியின் மாநாட்டை எங்கு நடத்துவது, பதவிநிலைகளுக்கு போட்டியிடுவது யார் என்பதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதெனவும் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரு பதவிக்கு போட்டியிடும்போது அந்த நிலைமைகளை தவிர்த்து இணக்கப்பாட்டின் அடிப்படையில் நிலைமகளை சுமூகமாக கையாள்வதெனவும் இருவரும் முடிவுகளை எடுத்துள்ளோம்.

மேலும், கட்சியின் மாநாட்டில் நிறைவேற்றப்பட தீர்மானங்களில் உள்ளீர்க்கப்பட வேண்டிய விடயங்கள் சம்பந்தமாக ஆராய்ந்ததோடு அதற்கான வரைவுகளை முன்னெடுப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சீனி இறக்குமதியில் இடம்பெறும் பாரிய மோசடி: வெளியான தகவல்

சீனி இறக்குமதியில் இடம்பெறும் பாரிய மோசடி: வெளியான தகவல்


விசேடமாக சம்பந்தனும் மாநாட்டின் தீர்மானத்துக்கான உள்ளீடுகளை வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, எம்மிருவரிடையே சமகாலத்தில் அரசாங்கத்தின் போக்குகள் மற்றும் ஆக்கிரமிப்புச் செயற்பாடுகளின் விரிவாக்கம் சம்பந்தமாக ஆராய்ந்திருந்தோம்.

அதுபற்றி அடுத்தகட்டமாக எவ்விதமான நடவடிக்கைகளை முன்னகர்த்தலாம் என்பது பற்றியும் ஆழமாக ஆராய்ந்திருந்தோம்.

தொடர்ந்து, அண்மைக்காலமாக திருகோணமலையை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படுகின்ற பௌத்தமத விரிவாக்கம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதோடு அதனை தடுத்து நிறுத்துவதற்காக சம்பந்தன் முன்னெடுத்த நடவடிக்கைகள் மற்றும் அதன் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்திருந்தோம் என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சம்பந்தனின் முதுமை மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அவர் பதவியிலிருந்து விலகுவது பொருத்தமானது என்ற தனது தனிப்பட்ட கருத்தினையும், கட்சியில் எடுக்கப்பட்ட தீர்மானத்தினையும் சுமந்திரன் பகிரங்கமாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US