அரசியல் தீர்வுடன் சேர்த்தே பொருளாதாரத் தீர்வு சாத்தியம்! தமிழ்க் கனேடிய முதலீட்டாளர்களுக்கு சம்பந்தன் விளக்கம்

M A Sumanthiran Rajavarothiam Sampanthan Shanakiyan Rasamanickam Economy of Sri Lanka
By Rakesh Nov 08, 2022 08:19 AM GMT
Report

நாட்டின் தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்று கிட்டினால் மட்டுமே அதனோடு சேர்ந்து பொருளாதாரத் தீர்வும் சாத்தியமாகும் என தம்மைச் சந்தித்த தமிழ்க் கனேடிய முதலீட்டாளர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் விளக்கமளித்துள்ளார். 

கொழும்பில் உள்ள சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று மாலை இந்தச் சந்திப்பு நடைபெற்றிருந்தது. 

சில தமிழ் கனேடிய முதலீட்டாளர்கள் அந்த நாட்டின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களோடு சம்பந்தனைச் சந்தித்து உரையாடியிருந்தனர். 

இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர். 

அரசியல் தீர்வுடன் சேர்த்தே பொருளாதாரத் தீர்வு சாத்தியம்! தமிழ்க் கனேடிய முதலீட்டாளர்களுக்கு சம்பந்தன் விளக்கம் | Sampanthan Explains To Tamil Canadian Investors

இலங்கையில் தமிழ் கனேடிய புலம்பெயர் மக்கள் முதலீடு செய்ய எடுத்த முடிவை சம்பந்தன் பாராட்டி, வரவேற்றார்.

முதலீடுகள்

''நாட்டுக்கும் தமிழர் தேசத்துக்கும் முதலீடுகள் அவசியம். ஆகவே இந்த முதலீடுகள் தமிழர் தாயகத்துக்கும் வரப்பிரசாதம் தான். இதன் மூலம் எமது தமிழர் தாயகத்துக்கும் விருத்தியும், எமது மக்களுக்கு வேலை வாய்ப்பும் கிட்டும். ஆனாலும், நாட்டின் பொருளாதார முயற்சி என்பது வெறுமனே வெளிநாட்டு முதலீடுகள் மூலம் மட்டும் எட்டப்பட்டு விட முடியாது.

நாடு தன்னை அபிவிருத்தி செய்வதற்கான சூழமைவு இங்கு ஏற்பட வேண்டும். தேசிய இனப் பிரச்சினையை மோசமாக கையாண்டதன் விளைவுதான் இந்த பொருளாதார பிரச்சினை; நெருக்கடி.

அரசியல் தீர்வுடன் சேர்த்தே பொருளாதாரத் தீர்வு சாத்தியம்! தமிழ்க் கனேடிய முதலீட்டாளர்களுக்கு சம்பந்தன் விளக்கம் | Sampanthan Explains To Tamil Canadian Investors

ஆகவே, இதிலிருந்து மீள்வதாயின் முதலில் தேசிய இனப் பிரச்சினைக்கும் இணக்கமான ஒரு தீர்வு காணப்பட வேண்டும். அத்தகைய சூழலில்தான் பொருளாதார மீட்சியும் சாத்தியமாகும்.

அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும்

எனவே நமது தாயகத்தில் முதலீடு செய்யும் அதே சமயத்தில், அந்த முதலீடு மூலம் நாடு பொருளாதார மீட்சி பெறக்கூடிய சூழமைவை உருவாக்குவதற்காக உங்கள் நாட்டு அரசுகள் மூலம் இங்கு தேசிய இனப் பிரச்சினைக்கு இணக்கமான - நியாய - தீர்வு கிட்டுவதற்கான அழுத்தத்தையும் நீங்கள் கொடுக்க வேண்டும்.

அரசியல் தீர்வுடன் சேர்த்தே பொருளாதாரத் தீர்வு சாத்தியம்! தமிழ்க் கனேடிய முதலீட்டாளர்களுக்கு சம்பந்தன் விளக்கம் | Sampanthan Explains To Tamil Canadian Investors

வெளிநாட்டு முதலீட்டுக்கும் தேசிய இனப் பிரச்சினைத் தீர்வுக்கும் உள்ள பிரிக்க முடியாத இணைப்பைப் புரிந்து கொண்டு, அதன் அடிப்படையில் முதலீடுகளை நீங்கள் முன்னெடுக்க வேண்டும்" என்று சம்பந்தன் இந்தச் சந்திப்பில் கருத்துரைத்தார் என்று அறியமுடிந்தது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US