வீரமுனை பெயர்ப் பலகையை அகற்ற சம்மாந்துறை பிரதேச சபைக்கு எந்த அதிகாரமும் இல்லை
வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான வீரமுனைக்கான பெயர்ப்பலகையை அகற்ற சம்மாந்துறை பிரதேச சபைக்கு எந்த அதிகாரமும் இல்லை என கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தெரிவித்தார்.
கல்முனை ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த காலத்தில் வீரமுனை வளைகோபுரம் அமைப்பதற்கு முயற்சித்த வேளையில் இதே தரப்பினர் இடையூறு விளைவித்த போதும் அன்றைய அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இனவாதம்
அதே போல் அண்மையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை தனது ஆதிக்கத்துக்குட்பட்ட 'ஏ' தர பிரதான வீதியில் வீரமுனை பெயர்ப் பலகையை அமைப்பதற்கு முற்பட்டபோது பிரதேச சபையின் அதிகாரங்கள் என்ன என்று தெரியாத ஒருசில உறுப்பினர்கள் இடையூறு விளைவித்து தடுத்திருக்கின்றனர்.
இதன் பின்னணி என்ன ? இனவாதம் விதைத்தவர்கள் இன்று செல்லாக்காசாய் போய்விட்டார்கள். இனவாதத்தை வைத்து அரசியல் செய்த காலம் மலையேறி விட்டது.
பிரதேச சபைக்குரிய அதிகாரங்களை அறியாமல் இரு சமூகங்களையும் மோதி விடுகின்ற செயற்பாட்டை அங்குள்ள ஒரு சில உறுப்பினர்கள் முன்னெடுக்கின்றார்கள் .இது கவலைக்குரிய விடயம் எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
