பாடசாலையில் திருடப்பட்ட பொருட்களை மீட்ட சம்மாந்துறை பொலிஸார்
சம்மாந்துறை கல்வி வலய சம்மாந்துறை அல்-அர்ஷாத் மகா வித்தியாலயத்தில் கடந்த 18ம் திகதி இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கைது செய்துள்ளதுடன், திருடப்பட்ட பொருட்களையும் சம்மாந்துறை பொலிஸார் மீட்டுள்ளனர்.
போதைப்பொருளுக்கு அடிமையான 21, 23, 25 வயதான மூன்று இளைஞர்கள் இவ்வாறு திருடப்பட்ட பொருட்களுடன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
சம்மாந்துறை கல்வி வலய சம்மாந்துறை அல்-அர்ஷாத் மகா வித்தியாலயத்தில் கடந்த 18ம் திகதி திருட்டு சம்பவம் ஒன்று நடைபெற்று அலுவலகத்திலிருந்த பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக 19ம் திகதி பாடசாலை அதிபரினால் சம்மாந்துறை பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இவர்கள் கைது செய்யப்பட்டதுடன், திருடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான பெறுமதியைக் கொண்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கே. சதீஸ்கரண்
தெரிவித்துள்ளார்.

