தமிழர் தீர்வு விடயத்தில் சம்பந்தன் சுமந்திரன் நிராகரிக்கப்பட வேண்டியவர்கள்(Video)
தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்தில் இரா. சம்பந்தன், சுமந்திரன் ஆகிய இருவரும் நிராகரிக்கப்பட வேண்டியவர்கள் என ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயலாளர் நாயகம் க.பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நேற்றையதினம் (20.07.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“கடந்த கால ஜனாதிபதி ஆட்சிமுறையில் தமிழ் மக்களுக்கு கிடைத்துள்ள பொன்னான சந்தர்ப்பம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி ஆகும்.
மக்களுக்கான தீர்வு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்களின்
பிரச்சினைக்கான தீர்வினை முன்வைக்க நினைத்தாலும் அதனை குழப்பும் வகையில் தமிழ்
தலைமைகள் செயற்படுகின்றனர்.
தமிழ் மக்களுக்கான தீர்வானது சம்பந்தர் ஐயாவுக்கும், சுமந்திரனுக்கான தீர்வு அல்ல. இவர்கள் இருவரும் நிராகரிக்கப்பட வேண்டியவர்கள்.
மக்களுக்கான தீர்வினை வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கைகள் எடுக்கும் நிலையில் அதில் குழப்பங்கள் ஏற்பட்டால் அதற்கான பொறுப்பினை சம்பந்தரும் சுமந்திரனுமே ஏற்றுக்கொள்ள வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல் - சரவணன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri
