தமிழ் மக்களின் முக்கிய கோரிக்கைகளை கட்டவிழ்த்த பிரதமர்
தமிழ் மக்கள் நிம்மதியுடன்தான் வாழ விரும்புகின்றார்கள். அவர்கள் ஒற்றையாட்சி வேண்டும் என்றோ சமஷ்டி வேண்டும் என்றோ விடுதலைப்புலிகள் கோரிய தனி நாடு வேண்டும் என்றோ ஒருபோதும் கோரவில்லை என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் "சமஷ்டிக் கோரிக்கையையும் தனி நாட்டுக் கோரிக்கையையும் விடுதலைப்புலிகளும் தமிழ் அரசியல்வாதிகளும் தான் கோரி வந்தனர்.
துணிவு இருந்தால் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துங்கள்
தமிழர்கள் ஒற்றையாட்சியைக் கோருகின்றார்களா? சமஷ்டியாட்சியைக்
கோருகின்றார்களா? தனி நாட்டைக் கோருகின்றார்களா? என்பதை அறியத் துணிவு
இருந்தால் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் சவால் விடுத்திருந்தார்.
ஒரு பக்கத்தில் தமிழ் அரசியல்வாதிகள் சமஷ்டி வேண்டும் என்று கோர மறுபக்கத்தில் விடுதலைப்புலிகள் தனி நாடு வேண்டும் என்று கோரினார்கள்.
இறுதியில் ஒன்றும் நடக்கவில்லை. இந்த ஒற்றையாட்சி நாட்டுக்குள்தான் மூவின மக்களும் இன்று வாழ்கின்றார்கள். என குறிப்பிட்டார்.
You My Like This Video

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
