திருகோணமலை உப்பு உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் சிக்கல்!(Video)
திருகோணமலை - கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் உப்பு உற்பத்திக்கான நிர்ணய விலை கிடைக்காமை தொடர்பில் உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் வில்வெளி, கச்சக்கொடித்தீவு போன்ற பிரதேசங்களை உள்ளடக்கிய வகையில் சுமார் 68 ஏக்கர் உப்பு உற்பத்தி செய்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
உப்பு உற்பத்தி செய்கைகள் வருடா வருடம் தொடர்ந்தும் நிலத்தை பண்படுத்தி செய்யப்பட்டு வருகிறது. உப்பு உற்பத்திக்கான நிர்ணய விலை கிடைக்காமை தொடர்பிலும் உற்பத்தியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி
கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு 2000 /2500 ரூபா அளவில் விற்பனை செய்யப்பட்டு வந்த உப்பு இந்த வருடம் 500 / 600 ரூபாவாகவே உள்ளது.
உப்பு உற்பத்தியை நம்பி வாழும் 300 குடும்பங்கள் பாதிப்பினை எதிர்நோக்குவதாகவும் தெரிவித்த உற்பத்தியாளர்கள் தற்போது பதப்படுத்தப்பட்டு செய்கைக்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
உற்பத்தி செய்கையின் பிற்பாடு கொள்வனவுக்கு உகந்த வகையில் ஏற்றுமதி செய்வதில் இழுபறி நிலை தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். மாரி மழை காலங்களில் நன்னீர் கலப்பு தங்களது உற்பத்திக்கு பெரும் சவாலாகவே உள்ளது.
ஒட்டுமொத்தமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பங்களிக்கும் இவ்வாறான உப்பளங்களை விருத்தி செய்வதற்கு உரிய அதிகாரிகள் இது தொடர்பில் கவனம் செலுத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |