உப்பின் விலை சடுதியாக அதிகரிக்கும் சாத்தியம்
நாட்டில் எதிர்வரும் நாட்களில் உப்பின் விலை அதிகரிக்கக் கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.
அடுத்து வரும் பண்டிகைக் காலத்தில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படுவதுடன் விலையும் சடுதியாக உயர வாய்ப்புள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உப்பு இறக்குமதி
கடந்த காலங்களில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே, இந்த நிலையை தவிர்ப்பதற்காக இந்தியாவில் இருந்து உப்பை விரைவில் இறக்குமதி செய்வது சிறந்து எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்ந்து பெய்து வந்த மழை காரணமாக உப்பு உற்பத்தி முடங்கிப் போயுள்ளதாகவும், இதனால் உப்பு உற்பத்தியாளர்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, உப்பு பாத்திகளில் மழைநீர் தேங்கி நிற்பதால், அதிக அளவு உப்பு கரைந்து நாசமாகியுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri