இடைக்கால வரவு செலவு திட்டத்துக்கான விவாதம் இன்று
அடுத்த ஆண்டின் முதல் 04 மாதங்களுக்கான அரச செயற்பாடுகள் மற்றும் கடன் சேவைகளை தொடர்வதற்கான இடைக்கால கணக்கறிக்கை இன்று (05) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
பிரதமர் ஹரிணி அமரசூரியவினால் (Harini Amarasuriya) இடைக்கால கணக்கறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதோடு, அது தொடர்பான விவாதம் இன்றும் நாளையும்(06) நடைபெறவுள்ளது.
இடைக்கால கணக்கறிக்கை தயாரிப்பு
அடுத்த ஆண்டு முதல் 4 மாதங்களுக்கும், தற்போது நடைபெற்று வரும் திட்டங்கள் மற்றும் அரசு சேவைகளை பராமரிக்க தேவையான நிதி இந்த இடைக்கால கணக்கறிக்கை மூலம் ஒதுக்கப்படவுள்ளது.
இடைக்கால கணக்கறிக்கையை தயாரிப்பதற்காக நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு நவம்பர் 25ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையில் திருத்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் தெரியவரும் என சபாநாயகர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், அண்மைய அனர்த்த நிலைமை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு மீதான விவாதம் நேற்று (04) பிற்பகல் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam