இலங்கையில் அழகு சாதனப் பொருட்கள் இல்லை! பலர் வேலை இழக்கும் அபாயம்
இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் அழகுசாதனப் பொருட்கள் விற்பனையகம் மற்றும் அதனுடன் சார்ந்த தொழிற்துறைகள் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகின்றன.
இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக, ஏற்பட்டுள்ள பற்றாக்குறையினாலும், உள்ளூர் பொருட்களை மாத்திரம் பயன்படுத்தியும் இத்துறையை நடத்த முடியாது என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
வேலை இழக்கும் அபாயம்
மூலப்பொருட்களின் பற்றாக்குறையால் கிட்டத்தட்ட தொண்ணூறு சதவீத சலூன்கள் ஏற்கனவே மூடப்பட்டுவிட்டன.
மேலும், இத்துறையில் கிட்டத்தட்ட 400,000 பேர் வேலை செய்கிறார்கள் மற்றும் இலட்சக்கணக்கானோர் அவர்களை நம்பியிருக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலை நீடித்தால் பெருமளவிலானோர் தங்களது வேலையை இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.