கத்திக்குத்து தாக்குதலின் பின் எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் தற்போதைய நிலை!
எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மேல் நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து அவருக்கு ஒரு கண் மற்றும் ஒரு கை முழுவதுமாக செயலிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
1988ஆம் ஆண்டு, சாத்தானின் வசனங்கள் என்ற நாவலை எழுதிய நிலையில் கடந்த 30 வருடங்களாக மரண அச்சுறுத்தலில் இருந்து வந்தவர் இந்திய - பிரித்தானிய நாவலாசிரியர், சல்மான் ருஸ்தி ஆவார்.
கத்திக்குத்து தாக்குதல்
அமெரிக்காவில் நியூயார்க் மாகாணம் சௌதாகுவா நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி இலக்கிய கருத்தரங்கில் பங்கேற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை, ஹாதி மாதர் என்ற 24 வயதான இளைஞன் ஒருவர் எழுத்தாளரை மேடையில் கத்தியால் தாக்கியிருந்தார்.
அத் தாக்குதலில் எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் மார்பு பகுதி, கழுத்து, கண் போன்ற பகுதிகளில் படுகாயமடைந்தார்.
அதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தநிலையில், தற்போது ஒரு கண் பார்வையை முழுமையாக இழந்துள்ளதாகவும், ஒரு கை செயலிழந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சாத்தானின் வேதங்கள்
எழுத்தாளர் சல்மான் ருஷ்டி 1988 இல் சாத்தானின் வேதங்கள் ( The Satanic Verses) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
அதில் அவர் இஸ்லாமியர்கள் பற்றி தவறாக எழுதியதாகக் கூறி அவர் மேல் பெரும் எதிர்ப்பு அலைகள் கிளம்பியது.
அவரது நான்காவது நாவலான - சாத்தானிக் வசனங்கள் - காரணமாக கிட்டத்தட்ட பத்து வருடங்கள் அவர் மறைந்து வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த நாவல் சில முஸ்லிம்கள் மத்தியில் சீற்றத்தைத் தூண்டியது, அதன் உள்ளடக்கம் தெய்வ நிந்தனை என்று கருதி, சில நாடுகளில் அது தடை செய்யப்பட்டது.
புத்தகத்தின் ஜப்பானிய மொழிபெயர்ப்பாளர் 1991இல் குத்திக் கொல்லப்பட்டார். சில மாதங்களுக்குப் பிறகு, ஒரு இத்தாலிய மொழிபெயர்ப்பாளரும் கத்தியால் குத்தப்பட்டார் மற்றும் புத்தகத்தின் நோர்வே பதிப்பாளர் சுடப்பட்டார் - ஆனால் இருவரும் உயிர் பிழைத்தனர்.
ருஷ்டிக்கு எதிரான கலவரங்களில் பலர் கொல்லப்பட்டனர், அதே நேரத்தில் தெஹ்ரானில் உள்ள பிரிட்டிஷ் தூதரகம் மீது கல்லெறியப்பட்டது.
புத்தகம் வெளியாகி ஒரு வருடம் கழித்து, ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கொமேனி தருஷ்டியை தூக்கிலிட எச்சரிக்கை விடுத்திருந்தார் .
மேலும், அவரின் புத்தகம் இந்தியாவிலும் தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
