தென்னிலங்கை அரசியலில் சிதையும் சுரேஷ் சலேயின் குடும்பம் - தப்பியோடும் அரசியல்வாதிகள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள புலனாய்வுத்துறையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேயின் குடும்ப உறுப்பினர்களை முன்னிலைப்படுத்தி பாரிய ஊடகப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, அவர்கள் மிகவும் இக்கட்டான மற்றும் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுரேஷ் சலே மரணப் போராட்டம் நடத்துவதாக பிரபல அரசியல்வாதிகளான உதய கம்மன்பில, நாமல் ராஜபக்ச, விமல் வீரவன்ச மற்றும் திலித் ஜயவீர உள்ளிட்ட தரப்பினர் மிகவும் அறமற்ற முறையிலான பிரசாரங்களை மேற்கொண்டனர்.
தப்பியோடும் அரசியல்வாதிகள்
இந்த ஊடக பிரசாரங்களுக்காக சுரேஷ் சலேயின் மனைவி, மகன் மற்றும் சகோதரர் ஆகியோரும் பயன்படுத்தப்பட்டனர்.
எனினும், தற்போதைய நிலையில், குறிப்பிட்ட அரசியல் தரப்பினர் சுரேஷ் சலே குறித்து எவ்வித கவனமும் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
சலே தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட பிரசாரங்கள் குறித்து உறவினர்கள் அவரிடமும் மகனிடமும் வினவப்பட்டுள்ளது.
அவர்களால் எவ்வித பதிலும் அளிக்க முடியாமல் மிகவும் மன வேதனைக்கும் இக்கட்டான நிலைக்கும் ஆளாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்! Manithan
ஜெயிலர் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா.. விஜய்யை தொடர்ந்து ரஜினி செய்யப்போகும் பிரம்மாண்ட விஷயம் Cineulagam
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri