வெளிநாட்டில் இருந்து கொலைக்கான ஆயுதங்களை சோதித்த சாலிந்த
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட கெஹெல்பத்தர பத்மே உட்பட 5 குற்றவாளிகள் தொடர்பில் நாளாந்தம் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய தகவல்கள் வெளிவருகின்றன.
இந்நிலையில் நாட்டில் இடம்பெற்ற கமண்டோ சாலிந்தவுடன் தொடர்புடைய துப்பாக்கிச்சூட்டு கொலைச்சம்பவங்களுக்கு அதற்கான ஆயுதங்களை சந்தேகநபர் எவ்வாறு பரிசோதித்ததார் என்ற காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
இதன்போது தொலைபேசி காணொளி அழைப்பின் மூலம் வெளிநாட்டில் இருந்து சாலிந்த துப்பாக்கிகளை பரிசோதித்துள்ளமை தெரியவந்துள்ளது.
90 நாள் தடுப்புக்காவல்
அத்தோடு 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கெஹல்பத்தர பத்மேவிடமிருந்து தெரியவந்த தகவல்களின்படி, அவர் இந்த நாட்டில் 'ஐஸ்' போதைப்பொருளை உற்பத்தி செய்வதற்கான ஆரம்ப பணிகளைத் தொடங்கியுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அதன்படி, அவர் போதைப்பொருள் உற்பத்திக்குத் தேவையான இரண்டு அடிப்படை இரசாயனங்கள் தோராயமாக 2,000 கிலோகிராம் நாட்டிற்கு இறக்குமதி செய்திருப்பது தெரியவந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஓட்டு தொழிலுக்குத் தேவையான இரசாயனங்களுக்கு இடையில் மறைத்து வைக்கப்பட்டு குறித்த சட்டவிரோத இரசாயனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
இதற்காக நுவரெலியா பகுதியில் ஒரு இடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படைப் பணிகளுக்காக சுமார் பல மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.



