இன்றைய நாணய மாற்று விகிதம்! டொலரின் பெறுமதி தொடர்ந்து உயர்கிறது
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 319 ரூபா 20 சதமாகவும், விற்பனை பெறுமதி 329 ரூபா 99 சதமாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 416 ரூபா 29 சதம். விற்பனை பெறுமதி 431 ரூபா 27 சதமாகவும், யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 350 ரூபா 05 சதம் விற்பனை பெறுமதி 361 ரூபா 83 சதமாகவும், சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 343 ரூபா 01 சதம். விற்பனை பெறுமதி 356 ரூபா 88 சதமாகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 252 ரூபா 17 சதம் விற்பனை பெறுமதி 262 ரூபா 77 சதமாகவும்,
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 235 ரூபா 97 சதம். விற்பனை பெறுமதி 246 ரூபா 86 சதமாகவும்,
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 54 சதம் விற்பனை பெறுமதி 2 ரூபா 65 சதமாகவும் பதிவாகியுள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri
