வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் விற்பனை கண்காட்சி
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் வடமாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் அனுசரணையில் விற்பனைக் கண்காட்சியொன்று இடம்பெற்றுள்ளது.
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி தலைமையில் நேற்று ( 25.03.2024 )ஆரம்பமான குறித்த கண்காட்சி காலை 9:00 மணியளவில் ஆரம்பமாகி மாலை 05.00 மணிவரை நடைப்பெற்றுள்ளது.
விற்பனை கண்காட்சி
இதன்போது வடமராட்சி கிழக்கு பிரதேசங்களில் வசிக்கும் சிறு தொழில் முயற்சியாளர்கள் தங்களது உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தி அதிகளவான விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த விற்பனை கண்காட்சியானது உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதோடு அவர்களது உள்ளூர் உற்பத்திகளின் தரத்தை மக்கள் மத்தியில் இலகுவாக கொண்டு சென்று உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்குடன் வடமராட்சிகிழக்கு பிரதேச செயலகத்தில் ஒவ்வொரு மாதமும் இடம்பெற்றுள்ளது.
[