முச்சக்கரவண்டி விற்பனை நிலையமொன்றின் சாரதி கைது! கைப்பற்றப்பட்ட முச்சக்கரவண்டிகள்
ஹட்டன் நகரிலுள்ள முச்சக்கரவண்டி விற்பனை நிலையமொன்றில், எஞ்சின் எண்களைப் போலியாகப் பதித்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மூன்று முச்சக்கரவண்டிகளுடன் அதன் உரிமையாளரையும் ஹட்டன் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நேற்றையதினம்(23.9.2026)ஹட்டன் நீதவான் பீட்டர் போல் முன்னிலையில் முற்படுத்தப்பட்டதையடுத்து, அவரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், குறித்த விற்பனை நிலைய உரிமையாளருக்கு 250,000 ரூபாவை முற்பணமாகச் செலுத்தி, எஞ்சிய தொகையைத் தனியார் நிதி நிறுவனம் ஒன்றின் மூலம் செலுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு முச்சக்கரவண்டி ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார்.
விசாரணை
அதன் பின்னர் முச்சக்கர வண்டியை பரிசோதித்தபோது, அதன் எஞ்சின் எண் போலியாகப் பதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அந்த முச்சக்கரவண்டியை மீண்டும் விற்பனையாளரிடம் கொண்டு சென்று ஒப்படைக்க முயன்றபோது, அவர் அதனைப் பொறுப்பேற்க மறுத்துள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட நபர் ஹட்டன் பொலிஸின் ஊழல் தடுப்புப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார். அம்முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், குறித்த விற்பனை நிலையத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மேலும் இரண்டு போலி முச்சக்கரவண்டிகளைக் கைப்பற்றினர்.
அத்துடன், சந்தேகநபரின் விற்பனை நிலையம் மற்றும் வீட்டினைப் பரிசோதித்தபோது, எஞ்சின் எண்கள் போலியாகப் பதிக்கப்பட்டு பிரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட இரண்டு எஞ்சின்களும், பல முச்சக்கரவண்டிகளின் இலக்கத் தகடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.





கொழும்பில் குடியிருப்பு தொகுதியில் தீ விபத்து - சிக்கிய 20க்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் - வெளியான காரணம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்! பின்னணியில் மறைந்துள்ள முக்கிய சூத்திரதாரிகள் உள்ளிட்ட சதியாளர்களின் பட்டியல்
அடுத்த 24 மணி நேரத்திற்குள் தீவிரமடையும் வானிலை: பல பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!
சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri
யூத் படத்தை தொடர்ந்து கென் கருணாஸ் நாயகனாக நடிக்கும் அடுத்தப்படம்... இயக்குனர் யார் தெரியுமா? Cineulagam
ரஜினி சார் மீது இருக்கும் மரியாதைக்காக ஒதுங்குகிறேன்.. தனுஷ் ஓம் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு Cineulagam