யாழில் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு தண்டப்பணம் அறவீடு
யாழில் அரிசியின் நிர்ணய விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த இரு வர்த்தகர்களுக்கும்,சமையல் எரிவாயு சிலிண்டரை பதுக்கி வைத்திருந்த வர்த்தகர் ஒருவருக்கும் தண்டம் அறவிடப்பட்டுள்ளது.
குறித்த மூன்று வர்த்தகர்களும் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புகொண்டமையை அடுத்து மூவருக்கும் தலா ஒரு இலட்சம் ரூபாய் தண்டம் அறவிடப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்ட பாவனையாளர் அதிகாரசபையினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனைகளை நடாத்தி , அரிசியை நிர்ணய விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த இரு வர்த்தகர்கள் மற்றும் எரிவாயு சிலிண்டரை பாவனையாளருக்கு வழங்காது பதுக்கி வைத்திருந்த வர்த்தகர் ஒருவர் என மூவருக்கு எதிராக தனித்தனியாக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
குறித்த வழக்கு விசாரணைகளின் போது வர்த்தகர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டமையை அடுத்து,மூவருக்கும் நீதிமன்று தலா ஒரு இலட்சம் ரூபாய் தண்டம் அறவிட்டுள்ளது.





மீனா தான் பெஸ்ட், நீ பிச்சைக்கார குடும்பம், ரோஹினியை வெளுத்த விஜயா... சிறகடிக்க ஆசை அதிரடி எபிசோட் Cineulagam

ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன? News Lankasri
