யாழில் எலி கடித்த உணவுப் பொருட்கள் விற்பனை
யாழில், எலி கடித்த உணவுப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த வர்த்தகருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
யாழ்.சாவகச்சோி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிற்குட்பட்ட மட்டுவில் பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று முன்தினம்(18.01.2023) பொதுச் சுகாதார பரிசோதகர்களால் மட்டுவில் சரசாலை ஆகிய பகுதிகளில் உள்ள உணவகங்கள், பலசரக்கு கடைகள் சோதனையிடப்பட்டிருந்தது.
உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை
இதன்போது மட்டுவில் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் எலி கடித்த உணவுப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த உணவக உரிமையாளர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் 5
வர்த்தக நிலையங்களில் கண்டுபிடிக்கப்பட்ட காலாவதியான பொருட்களும் பறிமுதல்
செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
