காத்தான்குடியில் சட்டவிரோத கசிப்பு விற்பனை! பெண்ணொருவர் கைது
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு விற்பனை நிலையத்தை செவ்வாய்க்கிழமை (13.06.2023) பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போது கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளடன் 86 போத்தல் கொண்ட 63 ஆயிரத்து 500 மில்லிலீற்றர் கசிப்பை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை
யாழ்.மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று பகல் மாவட்ட புலனாய்வு பிரிவினரும், பொலிஸாரும் இணைந்து ஆரையம்பதி சிகரம் பிரதேசத்திலுள்ள கசிப்பு விற்பனை நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போது அங்கிருந்து 86 போத்தல் கொண்ட 63 ஆயிரத்து 500 மில்லிலீற்றர் கசிப்பை மீட்டுள்ளதுடன், வியாபாரத்தில் ஈடுபட்ட 49 வயதுடைய பெண் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam