கடன் தொடர்பான பிரச்சினைகளுக்காக விற்கப்படும் சிறுமிகள்:விசாரணைகள் ஆரம்பம்
இந்திய ராஜஸ்தானின் பல மாவட்டங்களில் சிறுமிகள் விற்கப்படும் விவகாரம் குறித்து இந்திய மனித உரிமைகள் ஆணையம்,விசாரணையை முன்னெடுத்துள்ளது.
கடன் தொடர்பான பிரச்சினைகள்
ராஜஸ்தான் மாநிலத்தில் 8-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடன் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் சொத்துப் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக, சாதிப் பஞ்சாயத்துகள் நடத்தப்படுகின்றன.
இந்த பஞ்சாயத்துகள் நடத்தப்படும் போது, கொடுத்த கடனை திருப்பி தரமுடியாத குடும்பத்தினரின் தமது மகள்மாரைவிடுகின்றனர். அத்துடன் சொத்து பிரச்சினையில் தோல்விக்காணும் தரப்பின் மகள்மாரும் ஏலம் விடப்படுகின்றனர்.
ஏலத்தை சட்டப்பூர்வமாக்கல்
இந்த ஏலத்தை சட்டப்பூர்வமாக்க முத்திரைத் தாள்களும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஏலத்தில் கலந்துக்கொண்டவர்களில் சிறுமிகளை அதிக விலைக்கு ஏலம் எடுப்பவர், உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம், மும்பை, டெல்லி ஆகிய இடங்களில் உள்ள பல்வேறு விபச்சார விடுதிகளுக்கு அவர்களை விற்பனை செய்வதாகக் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, சிறுமிகளை ஏலம் விடுவதைத் தடுத்தால், அவர்களின் தாய்மார்கள் பலாத்காரம் செய்யப்படுவார்கள் என்ற நிபந்தனையும் உள்ளதாக இந்திய செய்தித்தாள் ஒன்று கூறுகிறது.





அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
